Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

குழந்தைகளே நாளை தீபாவளி. உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொடுத்த‍ புத்தாடை அணியவும், இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா?

மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள‍ சில முன்னெச்ச‍ரிக்கை பற்றிய பதிவே இது!

பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள்

  • பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடி வெடிக்க‍க் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெடிகளை திறந்த வெளியில் வைத்துத்தான் வெடிக்க‍ வேண்டும்.
  • குழந்தைகளே வெடி வெடிக்கும்போது, உங்களோட அம்மா அப்பா அல்ல‍து வீட்டில் உள்ள‍ பெரியவர்களை உங்களது பக்கத்திலேயே இருக்க‍ சொல்லி வெடிகளை வெடியுங்கள்.
  • *பட்டாசு வெடிக்கும்முன் ஒரு வாளி நிறைய தண்ணீர் பிடித்து, அதை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் எதிர்பாராமல் தீக்காயமோ அல்ல‍து உங்கள் மீது நெருப்போ பட்டால் உடனே அனைக்க‍ முடியும்.
  • குழந்தைகளே உங்கள் அப்பா அம்மாவிடம் பருத்தியிலான‌ ஆடைகளை கேட்டு, பெற்று அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், பருத்தியிலான ஆடை விரைவில் தீப்பிடிக்காது.
  • குழந்தைகளே செருப்பு போட்டுக்கொண்டு வெடிக்க‍ செல்லுங்கள் ஏனென்றால், ஏற்கெனவே கொளுத்தி போட்ட‍ அல்ல‍து மீதமுள்ள‍ வெடி அல்ல‍து சுர்சரா வத்திகளில் எஞ்சியிருக்கும் நெருப்பின் கவனிக்காமல் நீங்கள் மிதித்தால், தீக் காயம் ஏற்படும் அதை தவிர்க்க‍வே செருப்பு அணிய சொல்கிறேன்.
  • கம்பி மத்தாப்பு கொளுத்தியபின் அதனை அப்ப‍டி வீதியில் எறிந்து விடாமல் அதனை ஏற்கெனவே நீங்கள் எடுத்து வைத்திருந்த தண்ணீர் நிறைந்த ஒரு வாளியில் போட்டு விடுங்கள். ஏனென்றால், கொளுத்திய மத்தாப்பு கம்பிகளை வீதியிலேயே நீங்கள் போட்டுவிட்டீர்கள் என்றால், அதை நீங்கள் மிதிக்க‍ வேண்டியிருக்கும் அதனால் தீக்காயம் கூட ஏற்படும் அபாயம் உண்டு
  • எந்த வெடி வெடிப்ப‍தாக இருந்தாலும் அதன் அருகில் உட்கார்ந்து கொண்டு வெடிக்க‍ கூடாது. நீண்ட ஊதுபத்தி கொண்டு சற்று குனிந்து வெடிக்கு அருகில் உங்களது முகத்தை வைக்காமல் சற்று தள்ளி உங்களது கையை மட்டும் நீட்டி வெடியின் திரியை பற்ற‍வேண்டும். திரியில் சிறு தீப்பொறி தெரிந்தாலும் உடனே தூர விலகிடுங்கள்.
  • புஸ்வாணம் கொளுத்தும் போது மிகவும் கவனமாக கொளுத்த‍ வேண்டும் உட்கார்ந்து கொண்டு கொளுத்த‍க் கூடாது. மேலும் தீக்குச்சி கொண்டோ, ஊதுபத்தி கொண்டோ அவற்றை கொளுத்த‍க் கூடாது. கம்பி மத்தாப்பினை மட்டுமே பயன்படுத்தி கொளுத்த‍ வேண்டும். கொளுத்திய அடுத்த‍ விநாடியே தூர விலகிட வேண்டும்.
  • குழந்தைகளே நீங்கள் பட்டாசு வெடிக்கும்போது, உங்கள் மூக்கை கர்ச்சீப் கொண்டோ அல்லது சிறு துணிகொண்டு கட்டிக் கொண்டு பட்டாசு வெடியுங்கள். ஏனென்றால் பட்டாசு வெடிக்கும்போது உண்டாகும் புகை உங்களை பாதிக்கும் என்பதால்தான்.
  • குழந்தைகளே! நீங்கள் பட்டாசு வெடிக்கும்போது உங்களை யாராவது பயமுறுத்துபவர்கள் அருகில் இருந்தால், அதாவது வெடிக்கு நெருப்பு வைக்கும் முன்பே வாயால் ‘டாம்’ என்று சொல்லி உங்கள் பயமுறுத்தி அந்த பயத்தின் காரணமாக கூட தீக்காயம் உங்களுக்கு ஏற்படும். அவ்வாறு யாராவது இருந்தால், பயமுறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் அல்ல‍து அவர்கள் இல்லாத நேரமாக பார்த்து, உங்களது பயமுறுத்தாத பெரியவர்களின் துணை கொண்டு வெடிகளை வெடியுங்கள் .
  • குழந்தைகளே! நீங்க‌ள் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கும் போது, அவற்றை உங்களது வீட்டு மொட்டை மாடியிலோ அல்ல‍து ஏதேனும் திறந்த வெளியில் ஒரு கண்ணாடி பாட்டிலினுள் அவற்றை நிற்க வைத்து கொளுத்த‍ வேண்டும். அட்டைபெட்டியிலோ அல்ல‍து கைகளில் பிடித்துக்கொண்டோ அல்ல‍து கொட்டாங்குச்சியில் வைத்தோ வெடிக்க‍க் கூடாது.
  • *வெடிகளை வெடித்துக் கொண்டிருக்கும் போது,உங்களது கைகளை வாயில் கண்களிலும் வைக்க‍ வேண்டாம். ஏனென்றால், வெடிகளில் உள்ள வெடித் துகள்கள் உங்களது கைகளில் ஒட்டியிருக்கும். வாயில் வைத்தீர்கள் என்றால், அது கொடிய விழமாக மாறி தீராத வியாதிகளை ஏற்படுத்தும். கண்களில் வெடித் துகள்கள் ஒட்டிய உங்களது கைகளை வைத்தால், கண் பார்வை பாதிக்கும் அபாயம் உண்டு. பல நேரங்களில் உங்களது கண்பார்வையை நீங்கள் இழக்க‍ நேரிடலாம்.
  • குழந்தைகளே வெடி வெடிக்கும்போது, எந்த ஒரு உணவையும் சாப்பிட வேண்டாம். சாப்பிடவதாக இருந்தால் உங்களது கைகளை நன்றாக டெட்டால் அல்ல‍து கிருமி நாசினி எண்ணையை பயன்படுத்தி சுத்த‍மாக கழுவி விட்டு சாப்பிடுங்கள்.

#குழந்தைகள், #தீபாவளி, #தீப_ஒளி, #பட்டாசு, #வெடி, #புஸ்வாணம், #சங்குசக்கரம், #சுறுசுறாவத்தி, #தீக்குச்சி, #மத்தாப்பு, #புத்தாடை, #ஊதுபத்தி, #விதை2விருட்சம், #Children, #Diwali, #Deep_Light, #Fireworks, #Explosive, #Pussvanam, #Sagittarius, #Acrobatics, #Dikkukhi, #Maythappu, #Vadapathi, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

Leave a Reply