Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தனது திரைப்படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர இயக்குநரிடம் சொல்வார். தன்னுடன் நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, தனது சகாக்களிடம், சாதாரணமாக, ஏய் நா உயிரைக்கொடுத்து நடிச்சா, (நாகேஷை காட்டி) இவ குரங்கு சேட்டை பண்ணி ஜனங்கள ஈர்க்குறா பாரு என்ற சொன்னபோது, உடனே பதறிய அருகில் இருந்த இயக்குநர், நான் வேனும்னா நாகேஷிடம் சொல்லி கொஞ்சம் இதை வேண்டாம்னு சொல்லட்டுமா என்று கேட்க, அதற்கு நடிகர் திலகமோ, வேண்டாம்ய்யா , அவன் திறமை அவன் காமிக்கிறா, அவனும் முன்னேறட்டும் என்றாராம்.

அதேபோல்தான் நம்ம வடிவேலு பாலாஜியும். விஜய் தொலைக் காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சிரிச்சா போச்சு என்ற நகைச்சுவை பகுதி ஒளிபரப்பாகி, நேயர்களை மட்டுமின்றி பங்கேற்பாளர்களை சிரிக்கவும் வைக்கிறது. இந்த சிரிச்சா போச்சு என்ற பகுதியில் பங்கேற்கும் நகைச்சுவை நடிகர்களுள் மிகவும் முக்கியமானவர் வடிவேலு பாலாஜிதான்.

இந்த வடிவேலு பாலாஜியின் காமெடியை பார்க்கும் அனைவரும் ரசிக்கும் படியாக மட்டுமல்லாது விழுந்து விழுந்து சிரிக்கவும் வைப்பார். சரி, இந்த வடிவேலு பாலாஜி எப்படி கிங் மேக்கர் ஆனார் என்பதை இங்கு காண்போம்.

வடிவேலு பாலாஜியின் நகைச்சுவையில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் அந்த நடிகர்களினை திறமையை பேசும் பொருளாக மாற்றி மக்களிடையே பிரபலமடைய வைத்துள்ளார். ஆம் நான் சொல்வது மு்ற்றிலும் உண்மைதான் என்பதை மேற்கொண்டு இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

உதாரணமாக

ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர் மிகவும் திறமையான நகைச்சுவை நடிகர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. மக்களுக்கு ரோபோ ஷங்கர் என்றால் தெரியம் அவரது நகைச்சுவை ரசிப்பார்கள். ஆனால் நம்ம வடிவேலு பாலாஜி, ரோபோ ஷங்கருடன் நடிக்கும் போதும் சரி, ரோபோ ஷங்கர் இலலாத போதும் சரி பல நேரங்களில் ரோபோ ஷங்கர் போன்றே இம்மிடேட் செய்து, ரோபோஷங்கரின் திறமையை இன்னும் மக்கள் மனத்தில் ஆழப் பதியவைத்தார்.

ராமர்

ராமர், தனது தனித்திறமையால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அதனை இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் ராமர், சற்று வயி்ற்றை தள்ளிக்கொண்டு நடப்பது போன்றே வடிவேலும் பாலாஜி இம்மிடேட் செய்து இராமரை இன்னும் இன்னும் மக்களின் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

பழைய ஜோக்கு தங்கதுரை

சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பத்தோடு ஒன்று பதினொன்றாக இருந்து நகைச்சுவைகளை தனக்கே உரிய பாணியில் சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்த பழைய ஜோக்கு தங்கதுரையை, ஒரு சிரிச்சா போச்சு பகுதியில் ஏண்டா, இது பழைய ஜோக்கு, எதா ஒரு புது ஜோக்கு சொல்லு பார்ப்போம் என்று தங்கதுரை சொல்லும் ஒவ்வொரு ஜோக்கும் கவுண்டர் கொடுத்து கொடுத்து, தங்கத்துரை என்ற பெயருக்கு முன்னால் பழைய ஜோக்கு என்ற அடைமொழியை பெற்றுத் தந்தவர் நம்ம வடிவேலு பாலாஜிதான்.

புகழ்

அதே சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் நடிகர் புகழை அடிப்பது போல் பாசாங்கு செய்வார். அதற்கு புகழோ மிகவும் அற்புதமாக நடிப்பார். அதாவது நமது வடிவேலு பாலாஜி, புகழின் வாயில் அடிப்பது போன்று பாசாங்கு செய்தால், புகழோ உண்மையிலேயே அடித்து விட்டது போல் வலியால் துடிப்பார். இதையே ஒரு நிகழ்ச்சியில் புகழை அழைத்து, ஏண்டா என் கை உன்மேல பட்டுதா சொல்லு, நீ ரொம்ப நடிக்கிற. நீ என்தான் ஓவரா நடிச்சாலும் உனக்கு பேமண்ட் ஏறாது என்று சொல்லி புகழுக்கு புகழ் சேர்த்தவர் நம்ம வடிவேலு பாலாஜி தான்.

தன்னைவிட தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் பெயர் எடுத்து விடக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மை இவரிடம் அறவே இல்லை. இப்போது சொல்லுங்கள், தனிப்பட்ட முறையில் இவரும் காமெடி கிங்தான் என்றாலும், அடு்த்த காமெடி கிங்குகளை உருவாக்கும் இவர் உண்மையிலேயே காமெடி கிங் மேக்கர்தானே

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

#வடிவேல்_பாலாஜி, #பழைய_ஜோக்கு_தங்கதுரை, #பழைய_சோக்கு_தங்கதுரை, #புகழ், #விஜய்_டிவி_புகழ், #ரோபோ_ஷங்கர், #ராமர், #இராமர், #விஜய்_டிவி, #சிரிச்சா_போச்சு, #கலக்கப்போவது_யாரு, #கலக்கப்போவது_யாரு_சாம்பியன், #விதை2விருட்சம், #Vadivelu_Balaji, #vadivelu, #balaji, #Palaya_Jokku_Thangadurai, #Pazhaiya_Jokku_Thangadurai, #Pugazh, #Vijay_TV_Pugazh, #Pugal, #Robo_Shankar, #Ramar, #Vijay_TV, #Siricha_Pochu, #team, #Kalakka_Povadhu_Yaru, #kalakka_povathu_yaaru_champions, #kalakka povathu yaaru, #champions, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: