Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார்.

அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் தாரளமாக வெளியே செல்லாம், அதற்காக சபாநாயகரிடம் அனுமதி பெற தேவையில்லை என்று கூறி அமர்ந்தார். அமைச்சரின் இந்த பதிலை கேட்ட ஆசைத்தம்பி செய்வதறியாது திகைத்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுது தான் அந்த குரல் வெளிப்பட்டது, வெளிப் படுத்தியவர் கலைஞர். அமைச்சரின் பேச்சால் கடும் கோபத்துக்கு உள்ளான அவர், சபாநாயகரை பார்த்து கூறியதுதான் உச்சகட்ட அணுகுண்டு தாக்குதல்.”மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, ஆசைத்தம்பிக்கு சிறுநீர் வந்தால், அமைச்சர் சி.சுப்பரமணியன் ஏன் வாய் திறக்கின்றார்”? என்று கூறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அவரின் இடிமுழக்க கருத்தை கேட்ட சி.சுப்பரமணியன் அவமானத்தால் கூனி குறுகினார். கலைஞரின் பேச்சை கேட்ட காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்றால் அது மிகையல்ல.

=> நக்கீரன்

#கலைஞர், #கருணாநிதி, #மு_கருணாநிதி, #காமராஜர், #பெருந்தலைவர், #கல்வித்தந்தை, #ஏழைப் பங்காளன், #தமிழ், #தமிழ்நாடு, #முதலமைச்சர், #திமுக, #காங்கிரஸ், #ஆசைத்தம்பி, #சி_சுப்ரமணியன், #பெரியார், #விதை2விருட்சம், #அரசியல், #Kalaignar, #Karunanidhi, #M_Karunanidhi, #Kamarajar, #Perunthalaivar, #Kalvithanthai, #EzhaiPangalan, #Tamilnadu, #Chief_Minister, #DMK, #Congress, #Asaithambi, #C_Subramanian, #Periyar, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Politics

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: