Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம்.

(1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)  

(2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் – 27.6.1975)   
                                          
(3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப் பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)   

(4) அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப்பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)  
             
(5) மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் – 18.6.1993)   

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms – 362,P&A. R, DT – 4.11.1992)  

(7) தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் – 22.6.1993)   

(8) மாலை நேரக்கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண்.1341,பொது, நாள்-27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத் துறை, நாள் – 13.8.1983)       

(9) அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறா விட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் – 19.4.1996)        

(10) பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண்.7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் – 14.5.1985)

எங்கோ படித்தது.

#அரசு_ஆணை, #அரசாணை, #அரசு_ஊழியர், #பணியாளர், #ஊழியர், #பரம்பரை, #சொத்து, #குழந்தை, #வேலை, #அரசு_வேலை, #அரசாங்க #வேலை, #நடத்தை, #திருமணம், #பணி, #மாற்றுதல், #கண்காணிப்பாளர், #நிர்வாகி, #விதை2விருட்சம், #Government_Order, #Government, #Government_Servant, #Employee, #Inheritance, #Property, #Child, #Work, #Government_Job, #Government_Work, #Behavior, #Marriage, #Job, #Transfer, #Superintendent, #Administrator, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply