Tuesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுவையான சென்னா மசாலா – செய்முறை விளக்கம்

சுவையான சென்னா மசாலா – செய்முறை விளக்கம்

ஹோட்டல்களில் சாப்பிடும் போது இந்த சென்னா மசாலாவை சாப்பிட்டு இருப்போம். ஆகா சுவையாக இருக்கிறது என்று உச் கொட்டி சாப்பிட்டிருப்போம். அந்த சென்னா மசாலாவை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:

கொண்ட கடலை – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
வெங்காயம் – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவைக்கு ஏற்ப
தக்காளி – 2
பட்டை – 1
ஏலக்காய் -2
கிராம்பு – சிறிதளவு
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

முதலில் கொண்டைக் கடலையினை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 மணிநேரம் அதாவது இரவே ஊறவைக்கவும். பிறகு ஊறிய கொண்ட கடலையினை ஒரு குக்கரில் போட்டு 4 அல்லது 5 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்.

பிறகு மசாலா தயார்செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் அதனுடன் இஞ்சி, பூண்டு மற்றும் மேல் கூறிய அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.

வதக்கிய மசாலாவை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பச்சைமிளகாய் போட்டு தாளித்து அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை கொட்டி 5 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும்.

மசாலா நன்றாக கொதித்ததும் அதில் நாம் குக்கரில் வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 5 நிமிடம் வரை மூடி வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.

#மசாலா, #சென்னா, #சென்னா_மசாலா, #கொண்டை_கடலை, #கொண்டை, #கடலை, #விதை2விருட்சம், #Masala, #Chenna_Masala, #Chenna, #Kondai, #kadalai, #Kadalai, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply