Wednesday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காக்கிறார். மந்திரிகளோ மோசடியிலும் வன்முறைச் சம்பவங்களில் திளைத்துள்ளனர். பொருளாதார விவிகாரங்களில் பாஜக அரசு ஒன்றன்பின் ஒன்றாக தவறு செய்து வருகிறது. குற்றமற்ற அரசியல் தலைவர்களை சிறை வைத்திருப்பதும் வருத்த மளிக்கிறது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அழுத்தம் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டாலே அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். பொருளாதார மந்த நிலையில் இருந்துமீள இந்த அரசால் முடியாது, நிதியமைச்சரின் பேச்சு இந்த அரசின் மன நிலையை வெளிப்படுத்து கிறது. மத்திய நிதியமைச்சர் வெங்காயம் சாப்பிடுவது இல்லை, அதனால் அவர் ஏன் வெங்காயம் விலை உயர்வு குறித்து கவலைப்பட போகிறார்? பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். வேலை வாய்ப் பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

#ப_சிதம்பரம், #ஐஎன்எக்ஸ்_மீடியா, #சட்டவிரோத_பணப்பரிவர்த்தனை, #அமலாக்கத்துறை, #உச்சநீதிமன்றம், #ஜாமீன், #திகார் #சிறை, #பத்திரிகை, #பொருளாதாரம், #பாஜக, #பிரதமர், #நரேந்திர_மோடி, #மோடி, #மௌனம், #மந்திரி, #வன்முறை, #அரசியல், #சிறை, #ஜி_எஸ்_டி, #பணமதிப்பிழப்பு, #பண_மதிப்பு_நீக்கம், #வரி, #மத்திய_நிதியமைச்சர், #வெங்காயம், #விதை2விருட்சம், #P_C_Chidambaram, #INX_Media, #Illegal_Cash, #Enforcement, #Supreme_Court, #Bail, #Tihar, #Jail, #Press, #Economy, #BJP, #Prime Minister, #Narendra_Modi, #Modi, #Silent, #Minister, #Violence, #Politics, #Prison, #GST, #Money_Laundering, #Cash_Value_Removal, #Tax, #Federal_Finance_Minister, #Central_Minister, #Finance_Minister, #Onion, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply