சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே
என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது.
பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும், ஏற்படும் பிழைகள் கூட விஞ்ஞானிகளின் முடிவு விவரங்கள் குறித்த சரியான மதிப்பீடு செய்வதற்கும் திட்டமான முடிவுக்கு வருவதற்கும் தடையாக அமைகின்றன என்பது சந்திராயன்-2 விக்ரம் லேண்டரின் தோல்வியின் மூலம் உறுதியாகிறது.
அடுத்து விக்ரம் லேண்டர், சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரை இறங்குவதில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாகக்கூடிய இரண்டு நிலைகள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.
1. பூமியின் துணைக்கோளாகும் சந்திரனின் சுற்றுச் சுழற்சி பற்றிய விஞ்ஞானிகளின் வரையறை என்ன என்பதை தெரிந்து கொள்ள கூகுள் இணைய தேடு பொறிக்கு சென்று சர்க்கிள் ஆஃப் த மூன் (Circle of the moon) என்று Search செய்திட, அதில் சந்திரன் பூமியை எதிர்மறைச் சுற்று எனப்படும் இடப்பக்க சுற்றாக அதாவது மேற்கு திசையிலிருந்து கிழக்குப் பக்கமாக சுற்றிவரும் காட்சியை காண முடிகின்றது. ஆனால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து வகை பஞ்சாங்கங்களிலும் சந்திரன் பூமியை வலப்பக்க சுற்றாக அதாவது கிழக்கு திசையிலிருந்து மேற்கு பக்கமாக சுற்றி வருவதாக வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த வழிமுறையின்படி சந்திராயன்-2 விக்ரம் லேண்டரின் பயணப் பாதை வடிவமைக்கப்பட்டு, அது தரையிறங்குவதில் தோல்வி ஏற்பட்டது என்ற உண்மை நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட வேண்டும்.
முதல் தவறு குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
ஏனெனில் சந்திரன் பூமியை சுற்றிவரும் சுற்றுச் சுழற்சிக்கு எதிர்த் திசையில் செல்லும்படி விக்ரம் லேண்டர் பயணப்பாதை அமைக்கப் பட்டிருந்தால், அது சந்திரனில் மோதி செயலிழந்து விட்டது என்பதே உண்மை நிலையாக இருக்கக் கூடும். எனவே மக்களுக்கான விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை இஸ்ரோவுக்கு உண்டு.
2. இஸ்ரோவின் நவம்பர்-21ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி விக்ரம் லேண்டரானது நிலவின் மாதிரி தரைப்பகுதியில் நூற்றுக் கணக்கான முறை வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்துள்ளோம், அப்போது எந்த சிக்கலும் எழவில்லை என்ற விவரம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது தவறு குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
நிலவின் மாதிரி தரைப்பகுதியினைப் போன்று பூமியில் அமைக்கப் பட்டு பூமியின் இழுவிசை என்னும் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப விக்ரம் லேண்டர் தரை இறங்கும்படி வடிவமைத்து விட்டு, அதே அளவிலான வழிமுறையின்படி சந்திரனில் தரை இறங்க விக்ரம் லேண்டரை அனுப்பியது மிகப்பெரிய தவறாகும்.
அதாவது நிலவின் மாதிரி தரைப்பகுதியில் விக்ரம் லேண்டரை தரை இறக்கி பயிற்சித்து பார்க்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கின்றரே தவிர “நிலவின் மாதிரி தரைப்பகுதி அரங்கு” என குறிப்பிடப்பட வில்லை என்பதிலிருந்தே, புவி ஈர்ப்பு விசை தடுக்கப்பட்டு காற்று முழுவதும் வெளியேற்றப்பட்ட தனிப்பட்ட அரங்கு இஸ்ரோவில் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக இங்கு விளங்குகிறது.
இதன்படி கவனிக்கும்போது, காற்று மண்டலம் இல்லாத சந்திரனின் ஈர்ப்பு விசையைவிட பூமியின் ஈர்ப்பு விசையில் 6-ல் ஒரு பங்கு மட்டுமே கொண்டது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது ஒரு விநாடிக்கு சுமார் 150 கி.மீ. வேகத்தில் சென்று மோதியதால், விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அனைந்து செயலற்றுப் போய்விட்டது என்பதே உண்மையாக இருக்க முடியும் என்பதை அனைத்து இந்தியரும் புரிந்துகொள்ள வேணடும்.
மேற்கண்ட கருத்துக்களுக்கு ஏற்ப தற்போது அமெரிக்காவின் நாஸா டிசம்பர் 4 அன்று வெளியிட்ட அறி்க்கையின்படி, இந்தியாவின் விக்ரம் லேண்டரானது சந்திரனில் மோதி நொறுங்கி விட்டது என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.
ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகளோ கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டரின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட கோளாரின் காரணமாகவே விக்ரம் லேண்டர் நிலவில் மோதி தோல்வி அடைந்தது என பொய்யான அறிக்கையை விடுத்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
நிலவைப் பற்றி முழுமையான ஆய்வுக்கு அதன் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டரை தரை இறக்கி ஆய்வு செய்ய வேண்டியது அவசியமும் கூட. அதன்படி சந்திரயான் 3 திட்டத்தை 600 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது என நவம்பர் மாதம் 21 ஆம் தேதியிட்ட அறிக்கையில் குறிப்பு கொடுக்கப் பட்டுளளது.
இதுகுறித்த விவரங்களை இங்கு காண்போம்.
சந்திரனின் ஈர்பபு விசை, பூமியின் ஈர்ப்பு விசையில் 6ல் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் நிலையில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் எடையை கவர்ந்திழுத்துப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு சந்திரனின் ஈர்ப்பு விசையின் கவர்ச்சி விசைக்கு போதிய இழுவிசை சக்தி கிடையாது / இருக்காது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உணர்தல் வேண்டும். இதன் காரணமாக சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரும் தோல்வியில்தான் முடியும் என்பது எனது துல்லியமான கணிப்பு.
பூமியை பொருத்தவரை உலக விஞ்ஞானிகளின் பூமியின் தென் துருவப் பகுதியான அண்டார்ட்டிகா பகுதிக்கு சென்று ஆய்வுகள் செய்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. பொதுவாக ஈர்ப்பு விசை என்பது இழுவிசை தன்மை கொண்டது. இந்த இழுவிசை சக்தியே அண்டார்ட்டிகா பகுதியில் மனிதர்கள் என்று மட்டும் அல்லாது அனைத்து வகை திடப்பொருளையும் தன் ஈர்ப்பு விசையினால் இழுத்துக் கொள்கிறது என்பதே உண்மை நிலையாகும்.
இருப்பினும் சந்திரனின் மத்தியப் பகுதிக்கு மேல்பகுதியாகும் அதன் வடக்கு பகுதியில் மட்டுமே எந்த லேண்டரும் தரையிறங்கி ஆய்வு செய்ய முடியுமே தவிர, தென் துருவப்பகுதியில் லேண்டிங் என்பது எந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கும் இயலாத நிலையாகவே அமைந்திடும்.
இஸ்ரோவின் பொய்யான அறிக்கைக்கான எடுத்துக்காட்டு
இஸ்ரோவின் அக்டோபர் 7ஆம் தேதியிட்ட அறிக்கையில், சூரியனிட மிருந்து வெளிப்படும் எலக்ட்ரான் வகை மின்னூட்ட துகள்கள் நிலவின் மேல்பரப்பில் படிந்துளளது. அது நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவியின் மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கொடுக்கப்பட்டு ளளது.
அதாவது, மேற்கண்ட செய்தியின் விவரம் தற்போது இஸ்ரோவால்தான் கண்டுபிடித்து வெளியிடப்பட்டுள்ளதன் பேரில் அறிக்கை வெளியிட்டிருப்பது பொய்யான தகவல் ஆகும். ஏனெனில் மேற்கண்ட செய்தி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல் ஆகும் அதற்கான ஆதாரம் பழைய அறிவியல் புத்தகத்தில் கன்னிமரா நூலகத்தில் உள்ளது.
நவீன விஞ்ஞான யுகத்தில் சந்திரனின் சுற்றுச் சுழற்சி பற்றிய உண்மை நிலவரம் என்ன? எப்படி? என்பதை அறிந்திட முடியாத நிலையில் வாழ்ந்துவரும் 130 கோடி முட்டாள் இந்தியர்களில் நானும் ஒருவன்.
– அழகரசன் – 9176607331
முட்டாளின் வரிசை (ஆதார்) எண்.8120 1820 3094
பொறுப்பு துறப்பு – மேற்கண்ட கட்டுரையில் வரும் கருத்துக்கள் யாவும், மேற்படி கட்டுரையின் உரிமையாளர் திரு. அழகரசன் அவர்களுடைய சொந்த கருத்துக்கள். அந்த கருத்துக்களுக்கும் விதை2விருட்சம் இணையத்திற்கும் எந்தவித சம்பந்தமோ தொடர்போ கிடையாது.
#செயற்கை_கோள், #விக்ரம்_லேண்டர், #விக்ரம், #லேண்டர், #சந்திரயான், #சந்திரன், #நிலவு, #மதி, #நிலா, #இஸ்ரோ, #இந்திய_விண்வெளி_ஆராய்ச்சி_அமைப்பு, #சிவன், #தென்துருவம், #நாஸா, #நாசா, #அமெரி்க்கா, #விண்வெளி, #அண்டம், #பெருவெளி, #கோள்கள், #துணை_கோள், #மோடி, #நரேந்திர_மோடி, #சண்முக_சுப்பிரமணியம், #விதை2விருட்சம், #Satellite, #Vikram_Lander, #Vikram, #Lander, #Moon, #ISRO, #Indian_Space_Research_Organization, #Shiva, #South_Pole, #NASA, #America, #Space, #Universe, #Mercury, #Planets, #Narendra_Modi, #Shanmuga_Subramaniam, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,