Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

ஒரு திருமண விழாவில், பாஜக-வின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி. அரசகுமார், மேடையில் பேசும்போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக கடுப்பான பாஜக மாநில தலைமை, பொது விவாதங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பி.டி. அரசகுமார் பங்கேற்க தடை விதித்தது. இதனால் வெகுண்டெழுந்த பி.டி. அரசகுமார் இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்பதை பி.டி.அரசகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது யாதெனில்

‘’மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என்கிற எதார்த்தத்தை பேசினேன். அதற்காக கடந்த இரண்டு மூன்று நாட்களாக அநாகரிகமாகவும் கேட்கக்கூடாத கேள்விகளையும் என்னைக் கேட்டு அசிங்கப்படுத்தினார்கள். என் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்ட சூழலை எண்ணி மனம் சோர்ந்திருந்த நேரத்தில் மு.க. ஸ்டாலினின் அன்பின் அடிப்படையிலும், முன்னாள் அமைச்சர் ரகுபதி, பெரியண்ணன், உள்ளிட்ட புதுக்கோட்டை திமுகவினர், இதற்கு மேலும் நீங்கள் பொறுத்திருக்க வேண்டாம்.

நீங்கள் இணைய வேண்டிய இடம், இணைய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என அழைத்தார்கள். அதன் அடிப்படையில் திமுகவில் மன நிறைவோடு இணைந்தேன். எனது தாய் இல்லத்திற்கு நான் திரும்பியுள்ளேன். இன்னும் ஒரு சில மாதங்களில் ஏமாற்றத்தில் இருந்து மாற்றத்தை நோக்கி ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நல்லாட்சி அமைய இன்று முதல் எனது பயணம் தொடரும் என்பதை நான் பதிவு செய்கிறேன்.

பாஜக குறித்த கேள்வி ஒன்றிற்கு அவர் பதில் அளிக்கையில்

பாஜக பற்றி நான் இங்கே விமர்சிக்கவில்லை. பிரதமர் மோடியையோ, தேசிய தலைமையையோ நான் குறைகூற விரும்பவில்லை. தமிழகத்தில் ஒருசிலரை தவிர பாஜகவை வெளியே கொண்டு செல்ல மாட்டார்கள். வளர்வதற்கு தடையாக இருப்பார்கள். மற்றவர்கள் என்னைப்போன்றவர்களை எடுத்துக் காட்டாக எடுத்துக் கொண்டு மற்ற பாஜகவினர் முடிவுகளை எடுப்பார்கள்.

திமுகவில் இலக்கிய அணியில் இருந்தேன். அதனை தலைவர் அவர்கள் இலக்கிய அணியை கலக்கிய அணியாக மாற்றியவர் என தலைவர் நாவினால் புகழப்பட்டவன்.

என்னை ஏற்றுக்கொண்டவர்கள், என்னோடு தொடர்பில் இருப்பவ ர்கள், என்னோடு அங்கு இணைந்தவர்கள் கால சூழல் கருதி சுய நினைவோடு நல்ல முடிவெடுப்பார்கள். திமுக எப்படி பிடித்திருக்கி றது என்று கேட்பது, தேன் எப்படி சுவைக்கிறது என்று கேட்பதையும் சமமாக பார்க்கிறேன்.

பாஜகவில் இருந்த புல்லுருவிகள் என்னால் அவர்களது வளர்ச்சி தடைபடும் என நினைத்தவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காது’’ எனத் தெரிவித்தார்.

#P_T_Arasakumar, #BJP, #DMK, #M_K_Stalin, #Dravida_Munnettra_Kazhagam, #Baratiya_Janada_Party, #பி_டி_அரசகுமார், #பாஜக, #திராவிட_முன்னேற்றக்_கழகம், #திமுக, #பாரதிய_ஜனதா_கட்சி, #மு_க_ஸ்டாலின், #விதை2விருட்சம்,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: