Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் – நடிகை மீனா

ரஜினி ஒரு வியக்கத்தக்க ஆச்சரியம் – நடிகை மீனா

10 ஆண்டுகாலம் இடைவெளியில் ரஜினிக்கு மகளாவும், அதே ரஜினிக்கு மனைவியாகவும் நடித்தவர் நடிகை மீனா. இவர், ரஜினி கௌரவ வேடமேற்று நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து எஜமான் திரைப்படத்தில் மனைவியாகவும் நடித்து புகழ் பெற்றவர். இதனைத் தொடர்ந்து முத்து, வீரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது நடிகை மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். சென்னை காமராஜர் அரங்கில் நடந்த ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய மீனா “ரஜினிகாந்துடன் நிறைய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். ஆனால் நான் குழந்தையாக இருந்தபோதே அவருடன் பேசக்கூடிய, நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது இப்போது வரை தொடர்கிறது என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. மறுபடியும் ரஜினியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்று அவர் சொல்லி இரு க்கிறார். இப்போதுவரை எப்படி கொஞ்சம்கூட மாறாமல் இருக்கிறார் என்று புரிய வில்லை. நான் சின்ன வயதில் எப்படி பார்த்தேனோ, அப்படித் தான் இப்போதும் பேசுகிறார். பழகுகிறார். உண்மையிலே இது வியக்கத்தக்க ஆச்சரியம்.

இந்த மாதிரி ஒரு மனிதரை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. கண்டிப்பாக பார்க்கவும் முடியாது என்று நினைக்கிறேன். ரஜினிகாந்தை நல்ல நடிகராக, சூப்பர் ஸ்டாராக பார்த்து இருக்கிறோம். அதைவிட மிகப்பெரிய அற்புதத்தை வருங்காலத்தில் பார்ப்பதற்கு, நானும் உங்களை போன்று ரொம்ப ஆவலாகவும், ஆசையாகவும் இருக்கிறேன். அது கூடிய விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

#ரஜினி, #ரஜினிகாந்த், #சூப்பர்_ஸ்டார், #நடிகர், #நடிகை, #மீனா, #அன்புள்ள_ரஜினிகாந்த், #எஜமான், #முத்து, #குஷ்பு, #கீர்த்தி_சுரேஷ், #காமராஜர்_அரங்கம், #விதை2விருட்சம், #Rajni #Rajini, #Rajinikanth, #Superstar, #Actor, #Actress, #Meena, #Dear_Rajinikanth, #Ejaman, #Muthu, #Khushboo, #Keerthi_Suresh, #Kamarajar_Theater, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply