Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நன்கு அறிய ப்பட்டாலும், இதற்கு உடனடியாக என்ன தீர்வு என்பது குறித்த கேள்வி தான் மேலோங்கி உள்ளது. இந்த ஒரு நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுது உடனடியாக அந்தப் பெண்ணை மீட்பதற்கு பேருதவியாக “காவலன் செயலி” -ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் மூலம் ஒரு பெண் பாதிக்கப் படும்போது இந்த செயலியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், அப்பெண்ணுக்கு தேவை யான மிக முக்கிய மூன்று எண்களுக்கும் விவரம் தெரிந்து விடும் .அதன்பிறகு அதுவாகவே 15நொடிகள் கடந்தபின்பு வீடியோ ஆன் ஆகி பதிவாகும். இதன் மூலம் அங்கு நடக்கக்கூடிய அனைத்து விவரமும் தெரிய வரும்.

இப்படி ஒரு தருணத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த ஷ்யாம் சௌராசியா என்பவர் ஒருவிதமான பர்சை தயார் படுத்தி உள்ளார். இந்த பர்சில் டிரகர் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு “ஆன்ட்டி ரேப் கன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்சில் ப்ளூடூத் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  1. ஒரு ஆணின் விந்தணு ஒரு பெண்ணின் சினை முட்டையோடு சேரும்போது கரு (குழந்தை) உருவாகிறது. நாம் உண்ணும் உணவுகள் குழந்தையைத் தீர்மானிப்பதில்லை என்பது விஞ்ஞான உண்மை. உங்கள்…

  2. சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் சென்டர் கருவுறாமை, கர்ப்பத்திற்கு முந்தைய காலம், கர்ப்பம், கர்ப்பத்திற்குப் பின், பெண்ணோயியல், ஊட்டச்சத்து & உடற்பயிற்சி, பொது ஆரோக்கியம் மற்றும்…

  3. ஐயா வணக்கம் நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுகிறேன் நான் வசிக்கும் பகுதி தொழில் செய்யக்கூடிய பகுதி கணபதி யாகம் ஒரு சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று குளத்தில்…

ஆபத்து காலங்களில் இந்த பர்சில் உள்ள பட்டனை அழுத்தினால், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும், ஏற்கனவே சேவ் செய்து வைத்துள்ள அந்த பெண்ணுக்கு தேவையான முக்கிய நபருக்கு தகவல் அனுப்பி விடும். மேலும் இந்த பட்டனை அழுத்தும் போது பயங்கரமான சப்தம் கேட்கும் இதனால் அருகில் உள்ளவர்களும் அதனை புரிந்துகொண்டு உடனடியாக விரைந்து வந்து அப்பெண்ணை காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

#murder, #Anti_Rape_Gun, #ஆன்ட்டி_ரேப்_கன், #ஷ்யாம்_சௌராசியா, #வாரணாசி, #கொலை, #கற்பழிப்பு, #பாலியல், #பாலியல்_வன்கொடுமை, #பெண், #பெண்கள், #இளம்பெண், #விதை2விருட்சம், #பர்ஸ், #Shyam_Sowrashiya, #Varanasi, #Rape, #Sex, #Sexual_Abuse, #Girl, #Purse, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: