பெண்கள் உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும்

முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு அடுத்த படியாக உதடுகள்தான். அந்த உதடுகள், அந்த உதடுகளில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பும் பின்பும் சில குறி்ப்புகள் இங்கே காணலாம்.
• வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் லிப்ஸ்டிக் பூசுங்கள்.
• அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள். காரணம் உதடுகள் எளிதில் வறண்டு விடும்.
• பொதுவாக லிப்ஸ்டிப் போடுவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைத்த பின்பு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.
• ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. இது உதடுகளின் தன்மையை பாதித்து விடும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு உதட்டால் ஈரப்படுத்துவதையும், பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
• லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பென்சிலால் லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அவுட்லைன் போடவேண்டும். மெலிதான உதடுகள் கொண்டவர்கள் உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும், பருமனான உதடுகள் உள்ள பெண்கள் உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைன் போடவேண்டும்.
• இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு உதடுகளில் வாசலின் தடவிக் கொள்ளலாம். லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன்பு வாசலின் உபயோகித்தாலும் உதடுகள் பளபளக்கும்.
• அதிகமாக லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்து அகற்றுங்கள். துணிகளாலும், கைகளை பயன்படுத்தி அகற்றுவதை தவிர்க்க வேண்டும்.
#பெண், #பெண்கள், #உதடு, #லிப்ஸ்டிக், #வாசலின், #அவுட்_லைன், #தேங்காய்_எண்ணெய், #உதட்டுச்_சாயம், #விதை2விருட்சம், #Girl, #Girls, #Lipstick, #Vaseline, #Outline, #Coconut_Oil, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham