Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா

இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன?

வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான்.

பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு தன் தயவின்றி ப.ஜ. கட்சியால் ஆட்சியமைக்க முடியாது என்று தெரிந்ததும் தனக்கே முதல்வர் பதவி என்று சிவசேனா மிரட்டியது. கூட்டணித் துரோகம், மக்களுக்கு செய்த நம்பிக்கைத் துரோகமும்கூட,

தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று பா.ஜ.க. அறிவித்த குடியரசு ஆட்சியை அமல்படுத்தியது. அடுத்தக்கட்டம் எங்கே தங்கள் கட்சி உறுப்பினர்கள் மனம்மாறி விடுவார்களோ என்ற பயத்தில் சிவசேனா வெட்கம் மானம் கொள்கை எல்லா வற்றையும் விற்று தன் ஜென்ம விரோதக் கட்சிகளின் காலில் விழுந்தது சிங்கம் முயலான கேவலம்.

இரவோடு இரவாக விடியற்காலைக்குள் ஆளுநர் மாளிகையும், குடியரசு மாளிகையும் கூட்டு சேர்ந்து மீண்டும் பா.ஜ.க. விற்குப் பதவிப் பிரமாணம் செய்தது. அஜித்பவார் என்பவர் எப்போது துணை முதல்வரானார் என்று யோசிப்பதற்குள்ளாகவே ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பியது. எல்லாம் ஏகப்பட்ட டிவிஸ்ட்கள் நிறைந்த மகர் திரில்லர் காட்சிகள் என்றாலும் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய அநாகரிக அரசியல் செயல்கள்

ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் பாஜக இரவோடு இரவாக தெருக்கூத்து செய்து தெருவில் நிற்பது பரிதாபத்திலும் பரிதாபம். பதவி என்பது வெறும் பொம்மை பதவி என்பதையும் மகாராஷ்டிர மாநிலம் தெளிவுபடுத்தி விட்டது.

மதவாதக் கட்சிகளோடு கூட்டணியில்லை என்று முழங்கி வரும் காங்கிரஸ் அதிலிருந்து பிரிந்து போன தேசிய வாத காங்கிரஸ் இனி எப்படி மதச்சார்பற்றக் கட்சிகள் என்று மார்தட்டப் போகின்றன. ஊழல் கட்சிகள் உங்கள் வாக்கு என்று கொந்தளித்து வாக்குச் சேகரித்த சிவசேனா இனி எதைச்சொல்லி வாக்கு கேட்கும்?

வீர சிவாஜியால் பெருமை பெற்ற மகாராஷ்டிரத்தை வியாபார அரசியலால் மகா கேவல ராஷ்டிராவாக்கியவர்களை உரத்த சிந்தனை உள்ளவர்கள் அடுத்த தேர்தலில் ஓட ஓட விரட்டுவார்கள் என்பது உறுதி

திரு.உதயம் ராம் : 94440 11105

நம் உரத்த‍ சிந்தனை ( Nam Uratha Sindhanai ) மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்

ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.

#மகா(ராஷ்டிர)_கேவலம், #மகாராஷ்டிரா, #கேவலம், #பா.ஜ.க., #பாரதிய_ஜனதா_கட்சி, #கூட்டணி, #வாக்குரிமை, #பதவி_வெறி, #பட்னவிசு, #முதல்வர், #பிரச்சாரம், #தேர்தல், #முதல்வர், #சிவசேனா, #ஜனாதிபதி_ஆட்சி, #அஜித்பவார், #ஜனநாயகம், #கேலிக்கூத்து, #அரசியல், #மதவாதக் கட்சி, #காங்கிரஸ், #தேசிய_வாத_காங்கிரஸ், #வீர_சிவாஜி, #நம்_உரத்த_சிந்தனை, #உரத்த_சிந்தனை, #மாத_இதழ், #தலையங்கம், #விதை2விருட்சம், #Maharashtra, #BJP, #Bharatiya_Janata_Party, #Alliance, #Vote_Religious_Party, #Congress, #Nationalist_Congress, #Veera_Shivaji, #Our_Loud_Thought, #Loud_Thinking, #Monthly_Magazine, #Editorial, #Seed2tree, #seedtotree,#vidhai2virutcham, #vidhaitovirutcham, #uratha_sindhanai, #Nam_uratha_sindhanai

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: