Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள்.

இந்த ராசி பலன் என்பது நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து அந்த 7 ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு. குரு பகவான் கேது உடன் இணைந்து பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது சிறப்பு. அற்புதமான யோக நிலை. குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம். குரு பார்வை மேஷ ராசியின்மீது விழுகிறது. சனிபகவான் பார்வையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகர ராசிக்கு செல்வது யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜ யோக அமைப்பு உண்டாகிறது. பண மழை பொழியப்போகிறது. 2020 ஆம் ஆண்டு கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தினால் அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைகிறது.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, குரு பகவான் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார் என்றாலும் அஷ்டம குருவாக அமர்ந்தாலும் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தருவது சிறப்பு. அதே போல சனிபகவான் அஷ்டம சனி விலகி பாக்ய ஸ்தானத்தில் அமர்வது அற்புதம். செய்யும் தொழிலில் லாபம் வரும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் நஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இனி ராஜயோகம்தான். உங்க சுய ஜாதகத்தில் தசாபுத்தி அற்புதமாக இருந்தால் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.

மிதுனம்

குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. ராசிக்கு ஏழாம் வீட்டில் தற்போது உள்ள சனிபகவான் 2020ஆம் ஆண்டில் அஷ்டம சனியாக ஆட்சி பெற்று அமரப்போகிறார். என்றாலும் பயப்பட வேண்டாம். அவர் எட்டுக்கு உடையவர் எட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களை ஏழரை ஆண்டு காலம் ஆட்டி படைத்து விட்டார் சனி பகவான். உடல் ரீதியாக, மன ரீதியாக பல துன்பங்கள் பட்டுவிட்டனர். இனி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. குரு பகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அதேபோல மூன்றாம் வீட்டில் சனி அமர்வது டாப்தான் கடந்த ஏழரை ஆண்டு காலம் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப் போகிறது. செவ்வாய் வீடு அதிகாரம் படைத்த வீடு. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மகத்தான கால கட்டமாக உள்ளது. அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. வெளி நாடுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி சூரியன் ஆட்சி பெறும் ராசி. இந்த ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு மகத்தான ராஜயோகம், பதவி யோகம் கிடைக்கப் போகிறது. சனி பகவான் ஆறாம் வீடு விபரீத ராஜயோக நிலை கிடைக்கிறது. சனிபகவான் ஆறுக்கு உடையவன். சனி சூரியனுக்கு பகையாக இருப்பவர். அவர் சிம்ம ராசிக்கு கெட்டவர் ஆறாம் வீட்டில் மறைவது அற்புதம். 3,6,11 சனிபகவான் இந்த வீடுகளில் அமரும் போது சனிபகவான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார். பதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள். இந்த சனி பெயர்ச்சி அற்புதமான பலன் களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். இந்த யோகங்கள் பார்வையால் பணமழை பொழியப் போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.

கும்பம்

ராசிநாதன் சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜ யோகம். குருபகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து பயங்கர லாபத்தை தருகிறார். சனியும் குருவும் பதவி யோகம், ராஜயோகத்தை தருவார்கள். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் லாபத்தை தரும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும் சொத்து சுகம் சேரும் காலம் வந்து விட்டது.

மீனம்

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பதவி யோகம் கிடைக்கும். தலைமை பதவி கிடைக்கும். இனி சனியின் அருளால் சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். மகத்தான யோக நிலைகளை சனிபகவான் தரப்போகிறார். செல்வாக்கும் சொல்வாக் கும் கிடைக்கப் போகிறது. இந்த புத்தாண்டு உங்களுக்காக ஆண்டாக பிறக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலிகளாம்.. முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்!

#மேஷம், #ரிஷபம், #மிதுனம், #கடகம், #சிம்மம், #கன்னி, #துலாம், #விருச்சிகம், #தனுசு, #மகரம், #கும்பம், #மீனம், #சனி, #குரு, #காதல், #ராசி, #ராசிகள், #பலன்கள், #2020, #புத்தாண்டு, #ஜோதிடம், #ஜாதகம், #இலாபம், #விதை2விருட்சம், #Aries, #Taurus, #Mithuna, #Kadagam, #Simmam, #Lio, #Virgo, #Libra, #Scorpio, #Sagittarius, #Capricorn, #Pisces, #Saturn, #Guru, #Love, #Zodiac, #Zodiac, #Benefits, #2020, #New_Year, #Astrology, #Horoscope, #Profit, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply