2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்
சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு.
பேட்ட
இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது.
விஸ்வாசம்
அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் – நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம்.
வந்தா ராஜாவாதான் வருவேன்
நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது.
தேவ்
நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது.
ஐரா
நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.
சூப்பர் டீலக்ஸ்
நடிகர் விஜய் சேதுபதி, பெண் வேடத்தில் நடித்த திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ் இத்திரைப்படம் வந்த சுவடு தெரியாமல் ஓடி மறைந்தது
காஞ்சனா 3
நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் முந்தைய திரைப்படங்களின் தொடர்ச்சியாக இந்த காஞ்சனா 3 வெளியானது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், வேதிகா இணைந்து நடித்து பெருவெற்றிபெற்றது.
என்ஜிகே
மக்கள் மத்தியில் நல்ல நடிகன் என்று பெயர் எடுத்த நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம்தான் என்.ஜி.கே. இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படம் தோல்வியை தழுவியது.
அயோக்யா
நடிகர் விஷால் நடித்த அயோக்யா திரைப்படம் பெரு சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகி தோல்வி அடைந்தது.
மிஸ்டர் லோக்கல்
வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது என சொல்லலாம்.
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
சிந்துபாத்
விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக நடிகை அஞ்சலி இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படமும் ஓரளவு வெற்றி பெற்றதாக சொல்லலாம்.
கடாரம் கொண்டான்
முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் நடிகை அக்ஷரா ஹாசன் இணைந்து நடித்துள்ளார். இதை ஒரேயடியாக தோல்வி படம் என்று சொல்ல முடியாது.
நேர்கொண்ட பார்வை
தல அஜித்துடன் நடிகை ஷரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிக்பாஸ் புகழ் அபிராமியும் நடித்துள்ளார். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது.
கோமாளி
ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் கோமாளி. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் நடிகை சம்யுக்தா நடித்துள்ளனர். ஓரளவு வெற்றி பெற்றது .
நம்ம வீட்டுப் பிள்ளை
இந்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஒரு முன்னணி கதாநாயகியாக இருந்து கொண்டு, இப்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார் பலர் வியந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
அசுரன்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த அசுரன் திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிலமான பஞ்சமி நிலம் குறித்து கதை இருந்தது. இந்த பஞ்சமி நிலம் குறித்த சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
காப்பான்
நடிகர் சூர்யா, நடிகை ஆயிஷா இவரது கணவர் நடிகர் ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த இத்திரைப்படம் சுமாரான வெற்றியே பெற்றது.
கொலையுதிர் காலம்
நடிகை நயன்தாரா நடித்து வெளிவந்த திகில் திரைப்படம் தான் கொலையுதிர் காலம்.
பிகில்
இளைய தளபதி விஜய் – நடிகை நயன்தாரா இணைந்து நடித்து வெளியான இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் தந்தை கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் நடிப்பு சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. ஆனால் கதாநாயகனாக வரும் விஜய்யின் நடிப்பு பாராட்டக்கூடியது.

கைதி
கதாநாயகியே இல்லாமல் கதாநாயகன் ஒருவனை வைத்தே வெளிவந்த வித்தியாசமான திரைப்படம்தான் கைதி. இத்திரைப் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் இதில் கலக்கப்போவது யாரு புகழ் தீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதையம்சம் வித்தியாசமாக இருந்ததால் வெற்றி பெற்றது.
சங்கத் தமிழன்
நடிகர் விஜய சேதுபதி, நடிகைகள் நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது.
ஆக்ஷன்
நடிகர் விஷால் நடிப்பில் கருவாகி உருவாகி வெளிவந்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது என சொல்ல முடியாது.
எனை நோக்கிப் பாயும் தோட்டா
நடிகர் தனுஷுடன் நடிகை மேகா ஆகாஷ் நடித்து வெளிவந்த இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.
ஹீரோ
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடித்து வெளியான திரைப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081
#பேட்ட, # விஸ்வாசம், #வந்தா_ராஜாவாதான்_வருவேன், #தேவ், #ஐரா, #சூப்பர்_டீலக்ஸ், #காஞ்சனா, #என்ஜிகே, #அயோக்கியா, #மிஸ்டர்_லோக்கல், #சிந்துபாத், #கடாரம்_கொண்டான், #நேர்கொண்ட_பார்வை, #கோமாளி, #நம்ம_வீட்டுப்_பிள்ளை, #அசுரன், #காப்பான், #கொலையுதிர்_காலம், #பிகில், #கைதி, #சங்கத்தமிழன், #ஆக்ஷன், #எனை_நோக்கிப்_பாயும்_தோட்டா, #ஹீரோ, #ரஜினிகாந்த், #ரஜினி, #அஜித், #தல #அஜித், #சிம்பு, #சிலம்பரசன், #கார்த்தி, #நயன்தாரா, #விஜயசேதுபதி, #ராகவா_லாரன்ஸ், #சூர்யா, #சூரியா, #விஷால், #சிவகார்த்திகேயன், #விக்ரம், #ஜெயம்_ரவி, #தனுஷ், #விஜய், #தளபதி, #கார்த்தி, #விதை2விருட்சம், #Petta, #Viswasam, #Vandha_Rajavathan_Varuven, #Dev, #Ira, #Super_Deluxe, #Kanchana, #NGK, #Ayokya, #Mr_Local, #Sindhubaath, #Kadaram_Kondan, #Ner_Konda_Paarvai, #Komali, #Namma_Veettu_Pillai, #Asuran, #Kaappaan, #Kolaiyudhir_Kaalam, #Bigil, #Kaithi, #SangaThamizhan, #Action, #Enai_Nokki_Paayum_Thotta, #Hero, #Rajni, #Rajini, #Super_Star, #Ajith, #Thala, #Simbu, #Karthi, #Nayanthara, #Vijayasethupathi, #Ragava_Lawrence, #Surya, #Suriya, #Vijay, #Karthi, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,