“ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்”

உறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
நம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
சரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம்.
உங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மறக்காமல் எழுதி அதில் சொருகி வைத்திருக்க வேண்டும்.மேலுறை போடாதவர்கள், கைபேசியை திறந்து பேட்டரி மீது இந்த துண்டுச்சீட்டை வைத்து, மூடிவிடுங்கள்.
ஏன் இவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்றால், ஒருவேளை தனியாக நீங்கள் மட்டும் செல்லும்போது, உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மயக்கமோ அல்லது ஏதேனும் விபத்தோ ஏற்பட்டு கீழே விழுந்து காயம் பட்டுவிட்டது என்றால், அங்குள்ளவர்களில் யாராவது ஒருவர் கைபேசியை எடுத்து உங்கள் உறவுகளுக்கு தெரிவிக்க முற்படும்போது, நீங்கள் உங்கள் கைபேசியை LOCK செய்து இருந்தாலோ அல்லது கைபேசி கீழே விழுந்து உடைந்திருந்தாலோ அந்த இக்கட்டான நிலையை உங்கள் உறவுகளுக்கு தெரிவிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிடும். இதனால் உங்களுக்கு அவசர சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ காலதாமதம் ஏற்பட்டு மரணத்தைக்கூட சந்திக்க நேரிடும்.
அந்த இக்கட்டான தருணத்தில் இதே நீங்கள் ஒரு துண்டுச்சீட்டில் மேற்கூறிய குறிப்பு எழுதி வைத்திருந்தால், அந்த துண்டுச் சீட்டை எடுத்து படித்து, விரைவாக உங்கள் உறவுகளைத் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிதது, உங்களுக்கு கிடைக்க வேண்டிய அவசர சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்து உங்களை காப்பாற்ற முடியும்.
கைபேசி என்றால் நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக நமக்கு உதவும்படி நாம் வைத்திருக்க வேண்டும். ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான். ஆகவே உங்களின் ஆபத்தான தருணத்தில் உதவும்படி உங்கள் கைபேசியுடன் மேற்கூறிய குறிப்பினை மறக்காமல் எழுதி அதில் சொருகி வைத்து நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் உறவுகளுக்கும் சொல்லுங்கள்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 98841 93081
#வோடோபோன், #ஏர்டெல், #ஐடியா, #நோக்கியா, #சாம்சங், #கைபேசி, #அலைபேசி, #உலாபேசி, #செல், #செல்போன், #அவசரம், #அவசியம், #குறிப்பு, #விதை2விருட்சம், #Vodafone, #Airtel, #Idea, #Nokia, #Samsung, #handset, #mobile, #cell_phone, #cellphone, #emergency, #note, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
நன்றி பயனுள்ள தகவல்கள்