Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

எத்தனையோ நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனாலும் ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே சில சிறப்பு குணாதிசயங்கள் காணப் படுகின்றன. அத்தகை குணாதிசயங்கள் நடிகைகளில் ஒருவராக விளங்கும் அந்த நடிகைதான், நடுவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஜோக்கர், டம்பி டப்பாசு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்ன இன்னுமா தெரியவில்லை. அவர்தான் நடிகை ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிரப்பரப்பாகிவரும் Cooku with கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தன்னுடன் சேர்ந்து சமைக்கும் டாஸ்கில் கோமாளிகள் தெரிந்தோ தெரியாமல் செய்யும் தவறுகளை, கண்டு, பொறுக்க முடியாமல் கோபத்தின் உச்சிக்கே சென்று அவர்களை அடித்துக் கொண்டே இருப்பார்கள். இதனை பலமுறை அந்த கோமாளிகளை, தங்களது வேதனைகளைத் கேமரா முன்பு மனம் நொந்து தெரிவித்திருப்பார்கள்.

ஆனால், நடிகை ரம்யா பாண்டியனோ, கோமாளிகள் செய்யும் சேட்டைகளையும், தவறுகளையும், சிரித்துக்கொண்டே சகிப்புத் தன்மையுடன் அந்த தவறுகளை ரசித்தவாறே சமையல் டாஸ்க்கை முடித்துவிடுவார்.

சென்ற வாரம் நடைபெற்ற குக்கு வித் கோமாளி நிகழ்சசியின் நடுவர்கள் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவரும் நடிகை ரம்யா பாண்டியனை அழைத்து, அவரது இந்த குணத்தை பாராட்டி, புகழ்ந்து தள்ளி, மூக்கில் மேல் விரல் வைக்க வைத்துவிட்டார்.

#நடிகை, #நடிகை_ரம்யா_பாண்டியன், #ரம்யா_பாண்டியன், #Cooku_with_கோமாளி, #விஜய்_தொலைக்காட்சி, #விஜய்_டிவி, #தாமு, #வெங்கடேஷ்_பட், #நடுவர்கள், #விதை2விருட்சம், #Cookku_with_Komali, #Actress, #Actress_Ramya_Pandian, #Ramya_Pandian, #Vijay_TV, #Vijay_Television, #Dhamu, #Venkatesh_Batt, #Judges, #Judge, #justice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: