Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

இனிப்பு உணவுகளில் எப்போதுமே இந்த ரவா கேசரி என்றுமே முதன்மையானது என்றால் அது மிகையாகாது. அந்த ரவா கேசரியை நாமே சமைத்து ருசித்து சப்பிட்டால் அதன் சுவை இன்னும் பல மடங்கு கூடும்.

இந்த ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப், தண்ணீர் – 2 1/2 கப், சர்க்கரை – 1 3/4 கப், நெய் – 3/4 கப், கேசரி கலர் – சிறிதளவு, ஏலகாய் தூள் – சிறிதளவு, முந்திரிப் பருப்பு – தேவையான அளவு, உலர் திராட்சை – 1 தேக்கரண்டி

எப்படி செய்வது?

வாணலியை அடுப்பில் வைத்து, நெய் 2 தேக்கரண்டி விட்டவுடன் உலர் திராட்சையையும் முந்திரியையும் போட்டு நன்கு வறுத்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த வாணலியில் ரவையை கொட்டி உடன் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதன் வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்தவுடன், அதில் இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து, அடுப்பின் ஜுவாலையை குறைவாக வைத்தும், வாணலியில்மூடி போட்டும் நன்கு வேக வைக்கவும். அதன்பிறகு ரவை நன்கு வெந்தபிறகு அதில் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவேண்டும். கிளறும்போது ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையிடையே சிறிது நெய் விட்டுக் கொண்டே கிளற வேண்டும்.

கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய் அதில் ஊற்றி, ஏலப் பொடியை பரவலாக அதன்மீது தூவி, அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு வறுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை, முந்திரி அதில் போட்டு விட்டால் சுவையான ரவா கேசரி தயார்.

=> சசிகலா

#ரவா_கேசரி, #கேசரி, #Rava_Kesari, #Ravai, #Kesari, #ரவை, #நெய், #ஏலப்பொடி, #தண்ணீர், #சர்க்கரை, #நெய், #கேசரி_தூள், #ஏலகாய், #முந்திரி, #பருப்பு, #உலர்_திராட்சை, #விதை2விருட்சம், #Rava_Kesari, #Kesari, #Ravai, #Ghee, #Cardamom, #Water, #Sugar, #Ghee, #Kesari_Powder, #Cardamom, #Cashew, #Pulses, #Dry_Grapes, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: