Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

முக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடித்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியுடன் இணைந்து அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல்கள், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் பொதுவெளியில் நிலவியது.

இந்நிலையில், இன்று மதியம் தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.ஆர். ராமசாமி ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். கூட்டணியில் ஆரோக்கியமான விவாதம் வந்து செல்லும். இனி கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும் மு.க.ஸ்டாலினும் பேசிக்கொள்வோம். மற்றவர்கள் யாரும் பேசத் தேவையில்லை. நடிகர் ரஜினிகாந்த், துக்ளக்குடன் முரசொலியை ஒப்பிட்டு பேசியது தவறு’ என கே.எஸ்.அழகிரி கூறினார்.

#KS_Alagiri, #DMK, #Congress, #Dravida_Munnetra_Kazhagam, #கே_எஸ்_அழகிரி, #திமுக, #காங்கிரஸ், #திராவிட_முன்னேற்றக்_கழகம், #கூட்டணி, #நடிகர், #ரஜினிகாந்த், #துக்ளக், #Actor, #Rajinikanth, #Thuglak, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: