Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலூரில் பயங்கரம் – கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை – உயிர் ஊசல்

வேலூரில் பயங்கரம் – கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை – உயிர் ஊசல்

வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி நாசம் செய்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை.. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம். இதில், இளஞ்ஜோடிகளும் அடக்கம்!ஒருசிலர் காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் கோட்டையை சுற்றி உள்ள பூங்கா பகுதிகளில் அரங்கேறுவதும் உண்டு..பெரும்பாலான இடங்கள் இங்கு புதர்போல மண்டி கிடப்பதால் இளம்ஜோடிகளுக்கு வசதியாக போய்விட்டது. இந்நிலையில் தான், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவருக்கு வயது 24.. அதே கடையில்தான் காட்பாடியை சேர்ந்த ஒரு இளைஞரும் வேலை பார்க்கிறார்.. இவரும் காதலித்து வந்தனர்.. தனிமையில் சந்தித்து பேச நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கோட்டை பகுதிக்கு சென்றார்கள். இங்குள்ள பூங்கா அருகில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.9.30 மணி என்றாலும், நகரின் மையப்பகுதி என்பதால், மெயின்ரோடு அருகே உள்ளதாலும் பொதுமக்கள் நடமாட்டம் எப்பவுமே இங்கு அதிகமாக இருக்கும். காதலர்கள் பேசி கொண்டிருப்பதை 3 பேர் கும்பல் நோட்டமிட்டு கொண்டே இருந்தது.

பிறகு இளம்பெண்ணிடம் நெருங்கி, அவரது கையை பிடித்து தரதரவென இழுத்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன், அவர்களிடம் பெண்ணை மீட்க போராடினார்.. ஆனால் அவரையும் அந்த கும்பல் அடித்து உதைத்தது.. பின்னர் திடீரென பாக்கெட்டில் இருந்து பெரிய கத்தி ஒன்றை எடுத்து, காதலனின் கழுத்தில் வைத்து.. மிரட்டி… உட்கார வைத்தனர். இளம்பெண்ணிடமிருந்து கம்மல், செல்போனை பறித்து கொண்டு, 3 பேரும் மாறி மாறி சீரழித்துள்ளனர்.. இளம்பெண்ணோ கத்தி கூச்சலிட்டு கொண்டே இருக்கவும் 3 பேருமே தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து செய்வதறியாது தவித்த காதலன், வேலூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் வந்து இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமான விசாரணையை போலீசார் உடனடியாக ஆரம்பித்தனர். அண்ணா சாலையில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, 3 பேரின் அடையாளங்களை கண்டுபிடித்தனர்.. 3 பேருமே கஸ்பா வசந்தபுரம் பகதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.. எடுத்த எடுப்பிலேயே 3 பேரில் ஒருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேர் பற்றின விவரங்களை, பிடிபட்டவரிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். இதையடுத்து, நேற்றிரவே மற்றொருவரும் சிக்கினார்.. அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.. இன்னொருத்தர் மட்டும் இன்னமும் தலைமறைவாக உள்ளார்.. அவருக்கு வயசு 40 ஆகிறதாம்.. கல்யாணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டத்துடன்… வேலூரின் மையப் பகுதியில்… வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியிலேயே… உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மாவட்ட மக்கள் மீளவே இல்லை.

#வேலூர், #கோட்டை, #பலாத்காரம், #சிசிடிவி #கேமிரா, #பாலியல், #வேலூரில்_பயங்கரம், #கத்திமுனையில்_காதலிக்கு_நேர்ந்த_கொடுமை, #உயிர்_ஊசல், #விதை2விருட்சம், #Vellore, #fortress, #rape, #CCTV_camera, #sex, #terror_in_Vellore, #Cruelty_to_the_girlfriend_at_the_knife, #life_pendant, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham,#vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: