இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன்.
இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன். சினிமாவில் இப்போது தான் வந்த மாதிரி இருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு இன்னும் எனக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும்”. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
#Kajal_Aggarwal, #காஜல்_அகர்வால், #Kajal, #Aggarwal, #காஜல், #அகர்வால், #இந்தியன், #Indian, #விதை2விருட்சம், #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #vidhai2virutcham,