Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு…

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:

இயக்குநர் தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகி யிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈசி’ பாடல் தான். ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய நடிப்பை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22. இந்த சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன் வரவில்லை. அதன்பிறகு தான் சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

#முதிர்ச்சியான_வேடங்களில்_நடிப்பது_ஏன்?_ஐஸ்வர்யா ராஜேஷ், #ஐஸ்வர்யா_ராஜேஷ், #வானம்_கொட்டட்டும், #Aishwarya_Rajesh, #Vaanam_kottatum, #ராதிகா, #தர்மதுரை, #மணிரத்னம், #நம்ம_வீட்டு_பிள்ளை, #காக்கா_முட்டை, #Radhika, #Dharmadurai, #Maniratam, #namma_veetu_pillai, #விதை2விருட்சம், #Why_play_the #role_of_mature_Aishwarya_Rajesh, #Pour_the_sky, #Our_Household_Child, #Kakka_Muttai, #Namma_veetu_pillai, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply