Tuesday, July 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம்

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம்

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியாவும் இடம்பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசும் பொருளானது. இதனால் இவர்மீது சில சர்ச்சைகளும் வெடித்தாலும் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரனுக்கு அனுப்பிய பதிவு ஒலியில் லாஸ்லியாவுக்கு திரைத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். இதையடுத்து தமிழ்திரையுலகில் லாஸ்லியா எப்போது தனது அறிமுகமாவார். என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுககு எழுந்தது. இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் லாஸ்லியா நடிப்பது உறுதி ஆகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஆரி – ஸ்ருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்தாலும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா அறிமுகமாகிறார். இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்குகிறார். சந்திரா மீடியா விஷன் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் பெயர் விரைவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் யாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#இயக்குநர், #பிக்பாஸ், #நடிகர், #நடிகை, #ஆரி, #ஸ்ருஷ்டி_டாங்கே, #லாஸ்லியா, #கவின், #சந்திரா மீடியா விஷன், #ஆல்பர்ட் ராஜா, #கே_எஸ்_ரவிக்குமார், #உலகநாயகன், #கமலஹாசன், #விதை2விருட்சம், #Director, #Biggboss, #Actor, #Actress, #Ari, #Srushti_Dange, #Laslia, #Kavin, #Chandra_Media_Vision, #Albert_Raja, #K_S_Ravikumar, #world_leader, #Ulaga_Nayagan, #Kamalahasan, #Kamal, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply