Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி அன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் 13 பேர் உயிர்களை காவு வாங்கியது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் மக்கிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.

இந்நிலையில் இன்று இதுதொடர்பாக போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில்… “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை, சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். என்சிஆர் இன்னும் அமல்படுத்தப் படவில்லை; அது குறித்து ஆலோசித்துத்தான் வருகின்றனர். என்பிஆர் அவசியம் தேவை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.

மேலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, அரசியல் கட்சியினர் சுய லாபத்துக்காக தூண்டி விடுகிறார்கள். மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.”
இவ்வாறு நேரடியாக பா.ஜ.கவின் சி.ஏ.ஏ., என்.சி.ஆர்., என்.பி.ஆர்.க்கு பகிரங்கமாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வட்டி சர்ச்சை குறித்த செய்தியாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ரஜினி, “நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன், எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

#Rajinikanth, #CAA, #Thoothukudi_Firing, #ரஜினி, #ரஜினிகாந்த், #திருத்தப்பட்ட_குடியுரிமை_சட்டம், #தூத்துக்குடி_துப்பாக்கி_சூடு, #என்_சி_ஆர். , #என்_பி_ஆர், #பாஜக, #இலங்கை_அகதி, #இஸ்லாமியர்கள், #முஸ்லிம், #Citizen_Amendment_Act, #Citizen_Amendment_Bill, #CAB, #NCR, #NPR, #National_Citizenship_Register, #National_Population_Register, #Muslim, #Islam, #Srilankan, #Rajni, #Rajini, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply