Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ

உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்?

உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல•

எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள்

தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ? ஆகவே தனிமையில் இருப்பது விடுத்து எப்போதும் குடும்த்தினரோடும் உறவுகளோடும் நண்பர்களோடும் இருக்க பழகுங்கள்.

ஏதேனும் அநாதை ஆசிரமத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ செல்லுங்கள். உங்களிடம் பணம் இருந்தால், அந்த பணத்தில் அங்குள்ளவர்களுக்கு வயிறு சாப்பாடு அளியுங்கள். அவர்களோடு கலந்துரையாடுங்கள். அவர்களின் துன்பங்களையும் துயரங்களை காதுகொடுத்து கேளுங்கள். அப்படி கேட்கும்போது உங்கள் துன்பங்களும் துயரங்களும் கடுகு போல் சிறுத்துவிடும். அவர்களின் துன்பங்களும் துயரங்களும் மலையளவு உயர்ந்து இருக்கும். தானாகவே உங்கள் மனத்தில் இருக்கும் கவலைகள் யாவும் மறைந்து போகும்.

அதன்பிறகு இல்லம் திரும்பும் வழியில் உங்களுக்கு பிடித்தமான திரைப்படத்தை திரையரங்கு சென்று காணுங்கள். அதன்பிறகு இல்லம் திரும்பி உங்களுக்கு கவிதை எழுதும் திறமை இருந்தால் கவிதை எழுதுங்கள். ஓவியம் வரைய தெரிந்தால் ஓவியம் வரையுங்கள். அல்லது ஏதேனும் குப்பையில் கொட்டப்படும் பொருட்களை கொண்டு உபயோகமான பொருட்களை உருவாக்குங்கள்.

இவ்வளவும் கடந்த பிறகும் தற்கொலை எண்ணம் உங்கள் மனத்தில் இருந்தால், பாக்ஸிக் பயிற்சிக்கு உதவும் சேண்டு பேக் (Sand Bag) ஒன்றை வாங்கி வீட்டில் உத்திரத்தில் மாட்டி அதில் தற்கொலை, கவலை, விரக்தி, மன அழுத்தம் உட்பட போன்ற எதிர்வினை சொற்களை அதிலெழுதி வைத்து, அதனை குத்தி குத்தி பாக்ஸிங் பழகுங்கள்.

நேர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும் நல்ல நல்ல புத்தகங்கள் வாங்கிப் படியுங்கள். உதாரணமாக, விவேகானந்தர், ரமண மகரிஷி, தந்தை பெரியார் போன்றவர்களின் புத்தகங்களை படியுங்கள், பேச்சுக்களை யூடிபில் கேளுங்கள், சம காலத்தில் வாழும், சொல்லின் செல்வர் சுகிசிவம், சுப வீரபாண்டியன், இறையன்பு, உட்பட பலர் எழுதிய புத்தகங்களை படியுங்கள். பேசிய பேச்சுக்களை கேளுங்கள். எப்போதும் புத்தகம் ஒன்றை வைத்திருங்கள். மேலும் உங்கள் கைபேசியில் மேற்சொன்வர்களின் ஒலிப்பதிவுகளை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் மனத்தில் தேவையற்ற எண்ணங்கள் எழுகிறதோ அப்போதெல்லாம் அந்த புத்தகத்தை படியுங்கள். இவர்களின் பேச்சுக்களை கேளுங்கள். உங்கள் மனத்தில் தானாக தன்னம்பிக்கை எழும்.

நீங்கள் கேட்ட கேள்வியை, யாரோ ஒருவர் உங்களிடம் கேட்டதாக எண்ணி, அவருக்கு நீங்கள் சாவது தவறு, வாழ்வதே சரி என்ற கோணத்தில் அறிவுரை சொல்லும் விதமாக வழிமுறைகளை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வைத்து அதனை பல முறை படித்து மகிழுங்கள்.

மேலும் உங்களுக்காக வாழ விருப்பம் இல்லாமல் இருந்தால், அந்த வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கலாமே அன்னை தெரசா போல்.

உங்களுக்கு மது அருந்தும் பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அந்த பழக்கங்களை உடனே கைவிட முயற்சியுங்கள்.

அப்பொழுதும் உங்கள் மனத்தில் வாழ வழி தோன்ற வில்லை யென்றால், நேராக மனநல மருத்துவரிடம் சென்று, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

#என்னால்_எல்லோருக்கும்_கஷ்டம்_சாக_வழிசொல்லுங்கள், #சாவு, #தற்கொலை, #இறப்பு, #மரணம், #கொலை, #விரக்தி, #மன_அழுத்தம், #தீவினை, #மனநோய், #முயற்சி, #வாழ்க்கை, #வாழ்வு, #வாழ_வழி_உண்டு. #வெற்றி, #தோல்வி, #மது, #புகை, #விதை2விருட்சம், #death, #suicide, #death, #murder, #despair, #depression, #mental_illness, #effort, #life, #Success, #failure, #wine, #smoke, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply