Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்

ஏன்?- ஆஞ்சநேயரை பெண்கள் வழிபடக் கூடாது – அதிர்ச்சி தரும் ஆன்மீகம்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் இந்தியாவில் அனைத்து கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.இந்த பதிவில் பெண்கள் திருமணமாகாத பெண்கள் அனுமனை வழிபடலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.அனுமன்: ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயுபுத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வழிபடப்படுகிறார்.

சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக் கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்யக்கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.ஏன் அனுமதிக்கப் படவில்லை? புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் தனியாக வாழ வேண்டுமென்று விரும்புபவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த முறை மாறி அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடும் முறை கொண்டுவரப்பட்டது.

பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலும் அங்கு அனுமனின் உருவச்சிலையை தொடமால் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். இதற்கு காரணம் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் அனுமன் பெண்கள் தன்னை தீண்டுவதை விரும்பமாட்டார்.பாலினம் முக்கியமல்ல கடவுள் வழிபாட்டை பொறுத்த வரையில் வழிபாட்டிற்கோ அல்லது மந்திரங்களை கூறி வழிபடுவதற்கோ பாலினம் முக்கியமல்ல. ஆண், பெண் இருவருமே அனைத்து கடவுள்களையும் வழிபடலாம். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

=> சுபாஷினி என்பவர் எனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பிய தகவல் இது

#அனுமன், #ஹனுமன், #ஆஞ்சநேயர், #குரங்கு, #மந்தி, #பெண், #பெண்கள், #உருவச்சிலை, #மந்திரம், #கோயில், #கடவுள், #வழிபாடு, #விதை2விருட்சம், #Hanuman, #Anjaneya, #Monkey, #Woman, #Girl, #Idol, #Mantra, #Temple, #God, #Worship, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: