Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு

மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவிட்டவருக்கு நான் கொடுத்த விளக்கம் இதோ

50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏதோ இந்த பூமியில் வாழவே தகுதி இல்லாதவர்கள் போன்று அவர்களை ஏளனம் செய்தும், அடிமைகளை விட மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு கல்வி அறிவு தடைசெய்யப்பட்டது. ஏன் நடமாடக்கூட தடை விதிக்கப்பட்டதே! இந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும்தான் இந்த கதி என்றால்,

பெண்களின் நிலையோ இன்னும் மோசம், அவர்களின் வீட்டு ஆண்களால் எப்படி நடத்தப்பட்டனர். கட்டிய கணவன் கெட்டவனாக இருந்தாலும் அவனும் அவனது குடும்பத்தாரும் அவளை என்ன கொடுமைப்படுத்தினாலும் சரி, அதை எல்லாம் சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் அந்த ஆண்களுக்கு சேவை செய்து வாழ்ந்தார்களே!

இன்னும் சொல்லப்போனால் கணவன் இறந்து விட்டால் அவனது மனைவிக்கு சொல்ல முடியாத கொடுமைகள் நடக்குமே! கணவனின் சடலத்தை எரிக்கும்போதே மனைவியும் உடன்கட்டை என்ற பெயரில் பெண்களை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனரே. ஒரு வழியாக அன்றைய ஆட்சியாளர்களாக் அது தடை செய்யப்பட்டதும், அந்த கொடுமை வேறு வடிவம் பெற்று கொடுமைகள் பல அறங்கேறினவே சில ஜாதியில் பெண்களுக்கு மொட்டை அடித்து வெள்ளை புடவை உடுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டு வீட்டின் மூலையிலே முடக்கப்பட்டனரே!

(இந்த கொடுமைகளில் இருந்து உயர்சாதி, இடைச் சாதி பெண்கள் கூட தப்ப வில்லை)

ஆனால் இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் இவர்களெல்லாம் சமூகத்தில் இன்று, கல்வி அறிவு பெற்று, சுதந்திர காற்றை சுவாசித்தவாறு சுயமரியாதையுடனும் கம்பீரமாகவும் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அது யாரால்? திராவிட தலைவர்களால்தானே.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுவரவே திராவிட தலைவர்களின் ஆயுள்காலம் முழுவதுமே அர்ப்பணித்து ள்ளனர். இதில் எங்கே ராஜராஜனையும் சேரன்செங்குட்டுவனையும் நினைப்பது?

ஆனாலும் கிடைத்த‌ நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு சிறப்பு செய்திருக்கின்றனர். உதாரணமாக, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிக் குழந்தைகள் அறியும் வண்ணம் பாடமாக வைத்துள்ளனர். மேலும் அந்த பெருந்தலைவருக்கு மணிமண்டபம் அமைத்தும் பெருமை சேர்த்துள்ளனரே. இராஜராஜ சோழன் பற்றியும் அவன் கட்டிய கோயிலின் பெருமைகளையும் வரலாற்று பாடமாக வைத்துள்ளனர். சேரன்செங்குட்டுவனின் சகோதரன்தான் இளங்கோவடிகள் அந்த இளங்கோவடிகள் வடித்த சிலப்பதிகாரத்தை இன்று உலகம் அறியச் செய்திருக்கிறார்கள். நாயகி கண்ணகிக்கு சிலையெழுப்பி நினைவு கூர்ந்து கற்புக்கரசி என்று போற்றி வருகின்றனர். இதுபோதாதா?

உண்மையை உணர்ந்து பேசுங்கள்.

ஒரு வீட்டில் தந்தை செய்யத் தவறியதை மகன் முன்னின்று நல்ல முறையில் செய்து முடித்து வெற்றி காண்பது போலவே! நமது தலைவர்கள் செய்யத் தவறியதை நீங்கள் செய்யுங்கள். அதை யார் வேண்டாம் என்று சொன்னது. அதற்காக மானங்கெட்ட தமிழனே என்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

எதையோ படித்துவிட்டு உடனடியாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து விட்டு ஏதோ பெரிய சேவை செய்து விட்ட திருப்தியில், உங்கள் சொந்த வேலையை பார்க்க தொடங்கி விடுவீர்கள்.

இந்த சமூகத்தில் உங்கள் பங்கு என்ன?

ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவனின் புகழை இன்னும் மென் மேலும் மெருகேற்றி உலகம் அறிந்திடச் செய்ய, திராவிடத்தை குறை சொல்பவர்களே நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள். பதில் உண்டா?

திராவிடம் இல்லையேல் தமிழகத்தில் சுதந்திர காற்று என்பதே இல்லாமல் போயிருக்கும்.

கடவுள் மறுப்பு என்ற சிறிய வட்டத்துக்குள் நின்று பார்க்க வேண்டாம். அந்த வட்டத்திலிருந்து வெளிய வந்து பாருங்கள். திராவிடத் திரவியத்தின் வாசத்தை சுதந்திரமாக நுகருங்கள் உணருங்கள்.

திராவிடமே தமிழ் இனத்தின் உயிர்,
திராவிடமே தமிழ் இனத்தின் மூச்சு,
திராவிடமே தமிழ் இனத்தின் உரிமை
திராவிடமே தமிழ் இனத்தின் பாசறை

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#பாஜக, #பாரதிய_ஜனதா_கட்சி, #திமுக, #திராவிட_முன்னேற்றக்_கழகம், #அதிமுக, #அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம், #மதிமுக, #மறுமலர்ச்_ திராவிட_முன்னேற்றக_கழகம், #காங்கிரஸ், #விடுதலை_சிறுத்தைகள் _கட்சி, #விசிக ,#பாமக, #பாட்டாளி_மக்கள்_கட்சி, #தேசிய_முற்போக்கு_திராவிட_கழகம், #தேமுதிக, #அரசியல், #திக, #திராவிட_கழகம், #பெரியார், #கலைஞர், #கருணாநிதி, #அண்ணா, #ஸ்டாலின், #எடப்பாடி_பழனிச்சாமி, #ஓ_பன்னீர்செல்வம், #திருமாவளவன், #ராமதாஸ், #அன்புமணி, #அழகிரி, #ஸ்டாலின், #முக_ஸ்டாலின், #விதை2விருட்சம், #BJP, #Barathiya_Janatha_Party, #DMK, #Dravida_Munnetra_Kazhagam, #ADMK, #Anna_Dravida_Munnetra_Kazhagam, #MDMK, #Marumalarchi_Dravida_Munnetra_Kazhagam, #Congress, #Vidudhalai_Siruththaigal, #VCK, #PMK, #Pattali_Makkal_Kotchi, #Desiya_Murpokku_Dravida_Kazhagam, #Politics, #Politician, #DK, #Dravida_Kazhagam, #Periyar, #Kalaignar, #Karunanidhi, #Anna, #Stalin, #MK_Stalin, #Edapadi_Palanichami, #O_Panneerselvam, #Thirumavalvan, #Ramados, #Anbumani, #Azhagiri, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

One Comment

  • V2V Admin

    திராவிடத்தைத் தூற்றாதீர் என்ற எனது பதிவை படித்துவிட்டு வாட்ஸ் அப்பில் கடுமையாக விமர்சித்தவருக்கு உங்கள் அன்புக்குரிய விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய‌ நான் அளித்த விளக்கம் இதோ

    நான் தருமராக இருந்து அனைத்தையும் பார்ப்பதால் என் கண்களுக்கு பல நன்மைகள் தெரிகின்றன

    நீங்கள் துரியோதனன் ஆக இருந்து பார்ப்பதால் உங்கள் கண்களுக்கு சில தீமைகள் மட்டுமே தெரிகின்றன

    10,000 தீயவைகள் இருந்த இந்த சமூகத்துல இப்போ 100 ஆக குறைந்திருக்கிறதா? இல்லையா? என்பதை உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்

    தயவுசெய்து குறைகளை மட்டுமே கூறாமல் இந்த சமுதாயம் மென்மேலும் முன்னேற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்றி, ஒரு சிறு மாற்றத்தை உருவாக்கி காட்டுங்க

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: