Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: February 11, 2020

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான் தமிழ், மலையாள திரைப்பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளார். #தமிழ், #மலையாளம், #முன்னணி, #நடிகை, #நடிகை, #ரம்யா_நம்பீசன், #ராமன்_தேடிய_சீதை, #ஆட்ட_நாயகன், #இள
தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை. நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். => சண்முக ஐயப்பன் #தேங
டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் – ஹாட்ரிக் வெற்றி

டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் – ஹாட்ரிக் வெற்றி

டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் - ஹாட்ரிக் வெற்றி இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மாநில மக்கள், தேசியக்கட்சிகளான காங்கிரஸையும், பாஜாகவையும் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, மாநிலக் கட்சியான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் தேர்வு செய்துள்ளனர். தொடர்ச்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறை முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 04.00 நிலவரப்படி ஆம் ஆத்மி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன• இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லையென்பது குறிப்பிடத் தக்கது. #டெல்லி, #தில்லி, #தலைநகரம், #இந்தியா, #அரவிந்த்_கெஜ்ரிவால், #அரவிந்த், #கெஜ்ரிவால், #தேர்தல், #சட்டமன்றம், #சட்டசபை, #காங்கிரஸ், #ஆம்_ஆத்மி, #பாஜக, #பாரதிய_ஜனதா_கட்சி, #முதல்வர், #முதல