Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானதுதான் புலனம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த‌ வாட்ஸ் அப் என்ற செயலி. இதற்கு முன்பே அறிமுகமான முகநூல் எனும் ஃபேஸ் புக், மற்றும் கீச்சகம் எனும் ட்விட்டர் போன்ற சமூக வலைதங்களில் வரும் தகவல்களை விட இது அதிவிரைவாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் மக்களிடையே சென்றடைவது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என்று நாம் பெருமை பட்டுக் கொண்டாலும் மறுபக்கம் பொய்யான செய்திகளும் பற்பல வதந்திகளும், கணக்கின்றி சமூக வலைதங்களில் குறிப்பாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் அதிகளவில் இணைய உலகில் எந்தவிதமான இடையூறுமின்றி பரவி வருவதன் காரணமாக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவ தோடு, சிலநேரங்களில் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி விடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

இதனை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்தவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருப்பது அதைவிட வேதனையே!

இதுபோன்ற பொய்யான செய்திகளை, வதந்திகளை தடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஆனால் இது பயனாளர்கள் ஆகிய நம்மால் செய்ய இயலாது. வாட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தி வரும் நிறுவனங்கள் நினைத்தால் எனது யோசனையை பின்பற்றி இது போன்ற வதந்திகளை தடுக்க முடியும். ஆம். உண்மைதான், ஒரு தகவலையோ அல்லது ஒரு ஒளிப்படத்தையோ அல்லது ஒரு காணொலியையோ அல்லது ஒலிப்பதிவையோ புதியதாக ஒருவர் பதிவேற்றம் செய்யும் போதே அந்த பதிவுடன் அது யாரால் எப்போது பகிரப்பட்டது என்ற விவரம் ஒருவரி தகவலாக‌ தானாகவே சேர்ந்து பதிவேறும் வகையில் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களை கொண்டு வர‌ அந்நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இதனால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதங்களில் தகவல்களை யாராவது பதிவேற்றினால் அவர்கள் யார்? எப்போது பதிவேற்றினார் என்ற விவரம் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால், வதந்திகளை பதிவேற்றினால் வதந்தி பரப்புபவர்கள் எங்கே பெயரும் தேதியும் வெளிப்பட்டுவிடுமே என்ற பயத்தில் அவர்களின் அவ்வாறு பதிவேற்ற மாட்டார்கள். இதன் காரணமாக பொய்யான செய்திகளை, வதந்திகளை தடுக்க முடியும்.

எல்லாவற்றையும் விட‌ பதிவேற்றும் தகவல்கள் உண்மையான தகவல்களாக இருந்தாலும் தேதியை பார்த்து அது பழைய தகவலா அல்லது புதிய தகவலா என்பதை அறிந்து கொண்டு அந்த பதிவை மேற்கொண்டு பகிரலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவு பயனாளர்களாகிய நமதுகையில் தான் இருக்கிறது.

எனது யோசனை மூலம் அந்நிறுவனங்கள் செயல்பட்டு தொழில் நுட்பத்தில் மாற்றங்களை கொண்டு வந்தால், மக்களிடையே பீதியை கிளப்பும் வதந்திகளும் சரி பழைய தகவல்களும் சரி பதிவேற்றப் படுவதும், பகிர்வதும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். இப்போது சொல்லுங்கள் எனது ஆலோசனை சரியானது தானே

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 98841 93081

#வ‌தந்தி, #போலி, #பொய், #பொய்_செய்தி, #தகவல், #பழையது, #வாட்ஸ்_அப், #பீதி, #தேதி, #புலனம், #கட்செவி, #விதை2விருட்சம், #சைபர்_கிரைம், #Gossip, #fake, #lie, #false_news, #information, #old, #whatsaap, #panic, #date, #investigation, #Cyber_Crime, #party, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: