Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?

க‌தறி அழுது தப்பித்த‌ நடிகை மெஹ்ரீன் – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்?

சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு நடிகை நடித்த அஸ்வத்தாமா என்கிற படம் வெளியானது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால், இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கான வாடகையை கட்டமுடியாது என படத்தின் தயாரிப்பாளர் பிடிவாதம் பிடித்ததாகவும், ஆனால் அங்கிருந்து அந்த நடிகை சாமர்த்தியமாக தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது ஓட்டலில் தப்பித்த நடிகை யார் என்றால் அவர்தான் நடிகை மெஹ்ரீன் ஆவார். இவர் தமிழில் நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டாஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தரப்பு மீது காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன். “பெண்கள் முன்னேற்றத்துக்காக படம் எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நிஜ வாழ்க்கையில் அவர்களை மரியாதை குறைவாக நடத்துவது என்ன விதமான அறிவு என்று தெரியவில்லை. என் கவுரவத்திற்கும், சுயமரியாதைக்கும் அப்படி ஒரு இழுக்கு வரும்போது நான் என் பக்கம் தான் நிற்பேன். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் தொழில் செய்வதிலும் இன்னொருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதையை கொடுப்பதிலும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” என கூறியுள்ளார் மெஹ்ரீன்.

இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மைதான் என்பது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#தமிழ், #நெஞ்சிலே_துணிவிருந்தால், #பட்டாஸ், #மெஹ்ரீன், #தனுஷ், #அஸ்வத்தாமா, #விதை2விருட்சம், #பெண், #ஓட்டல், #தப்பித்த, #தப்பித்த_நடிகை, #Tamil, #Nenjile_Thunivirudhal, #Pattasu, #Mehrin, #Mehreen, #danush, #Asvaththama, #vidhai2virutcham, #girl, #actress, #hotel, #escape, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: