Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்

திருமதி தமிழ் (தமிழ் எம்.ஏ) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக மாகி, சுந்தர்.சியுடன் இணைந்து ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் நடித்து, பின் அங்காடித் தெரு என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர் நடிகை அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனால் ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியநாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 படமும் நல்ல விமர்சனங் ளை பெற்றது, இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இயக்க உள்ளார். 59 வயதாகும் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக 33 வயதாகும் நடிகை அஞ்சலி நடிக்க உள்ளார். அஞ்சலிக்கு முன் நடிகை நயன்தாரா மற்றும் அனுஷ்காவை நடிக்க வைக்க ஏற்பாடு செய்ததாகவும், ஆனால், அவர்கள் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது அஞ்சலியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்ட நடிகை அஞ்சலியின் ரசிகர்கள் அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பியதாக தெரிகிறது. அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? எவ்வளவு இளம் நடிகர்கள் இருக்கும்போது நீங்களா இப்படி? என்ற கேள்வியே பிரதானமாக இடம்பெற்றிருந்ததாக சொல்லப் படுகிறது.

#அஞ்சலி, #பாலகிருஷ்ணா , #Anjali, #Bala_Krishna, #திருமதி_தமிழ், #தமிழ்_எம்_ஏ, #தமிழ், #சுந்தர்_சி, #ஆயுதம்_செய்வோம், #அங்காடித்_தெரு, #நடிகை_அஞ்சலி, #ஜெய், #விமல், #ஜெயம்_ரவி, #விதை2விருட்சம், #Thirumathi_Thamizh, #Thamizh_M_A, #Sundar_C, #Aayutham_Seivom, #Angadi_Theru, #Actress_Anjali, #Jai, #Vimal, #Jayam_Ravi, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: