Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகனுக்கு கமிட்டான அப்பாவின் நடிகை

மகனுக்கு கமிட்டான அப்பாவின் நடிகை

நடிகை மியா ஜார்ஜ். தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் மலையாளத்திலும் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார். ஆக தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் இவர், தற்போது ஒரு புதிய படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மலையாளத்தில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான சலாம் காஷ்மீர் என்கிற படத்தில் காளிதாஸின் தந்தை ஜெயராமுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#மியா_ஜார்ஜ், #Mia_George, #ஜெயராம், #தமிழ், #மலையாளம், #சலாம்_காஷ்மீர், #அமரகாவியம், #ஒரு_நாள்_கூத்து, #இன்று_நேற்று_நாளை, #காளிதாஸ், #விதை2விருட்சம், #Jayaram, #Tamil, #Malayalam, #Salam_Kashmir, #Amarakaviyam, #Oru_Naal_Koothu, #Indru_Nettru_Naalai, #Kaldoss, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply