Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது என்னவோ பழமைவாதம் என்று அதனை புறக்கணித்து விட்டு தலைக்கு எதை எதையோ வாங்கித் தேய்த்து இறுதியில் தலைமுடி தனது அழகை இழப்பதுடன், ஈறு, பேன் தொல்லைகளால் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது.

இன்று பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். பேன் தொல்லையிலிருந்து விடுபட முதலில் கூந்தலை வறட்சியில் இருந்து மீட்கவேண்டும். தேங்காய் எண்ணெயை எடுத்து உச்சியில் வைத்து நன்றாக தேய்த்து, பின் தலைமுழுக்க தேங்காய் எண்ணெய் பரவலாக தேய்த்து விட்டுபின் சீப் கொண்டு தலைமுடியை வாரி அழகு படுத்தலாம். தலைக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து அதனை உறுதியாக்குகிறது. இதன் காரணமாக பேன் தொல்லையும் அறவே இருக்காது. ஆகவே தலைக்கு எண்ணெய் தேய்க்க மறக்காதீங்க.

#தலைமுடி, #முடி, #மயிர், #கேசம், #கூந்தல், #பேன், #பொடுகு, #தேங்காய்_எண்ணெய், #அழகு, #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Hair, #lice, #dandruff, #coconut_oil, #beauty, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: