Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

பெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று.

பெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும்.

ஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ணெயை நன்கு ஊறும். மேலும் மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டமும் சீராகி முடியின் ஆரோக்கி யத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலை முடி கொட்டுவதும் குறைவதோடு, பளபளப்புடன் கூடிய கவர்ச்சியாக காட்சியளிக்கும்.

#தலைமுடி, #முடி, #கேசம், #கூந்தல், #மயிர், #பொடுகு, #பேன், #எண்ணெய், #தேங்காய், #தேங்காய்_எண்ணெய், #பொடுகு, #முடி #கொட்டுதல், #நுனிமுடி_பிளவு, #வறண்டு_இருத்தல், #விதை2விருட்சம், #Hair, #Dandruff, #Lice, #Oil, #Coconut, #Coconut_Oil, #Hair_Loss, #Tip_Hair_Split, #Dryness, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: