Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு

ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு

ஜிலேபியின் ருசிக்கு அடிமையாகாதவர்கள் யார்? குழந்தைகள் முதல் சர்க்கரை நோய் உள்ள முதியோர் வரை ஜிலேபி என்றாலே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும் ஜிலேபி போலவே ஜிலேபியின் வரலாறும் சுவையானது. ஜிலேபியானது மேற்கு ஆசியாவில் இருந்த இதை ஒத்த ஒரு உணவு வகையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ஜிலேபி என்ற பெயரானது ஹாப்ஸ்ன் ஜாப்சனின் கூற்றுப்படி அருபு மொழிச் சொல்லான ஜூலாபியா [ ZULABIYA ] அல்லது பாரசீக மொழிச் சொல்லான சோல்பியா என்பதில் இருந்து பெறப்பட்டது. இவை ஜிலேபியை ஒத்த உணவின் பெயராகும். மேற்கு ஆசியாவில் உள்ள கிருத்துவ சமயங்களில் இது திஹோனி [மூவிராசாக்கல் திரு நாள்] விருந்தில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் இலங்கப் பட்டையுடன் வழங்கப்படுகிறது. ஈரானில் இது சோல்பியா என அறியப்படுகிறது. ரமலானில் பாரம்பரியமாக ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டு சமையல் நூல் ஜூலாபியா செய்ய பல சமையல் குறிப்புக்களைக் கொடுக்கிறது. 13ம் நூற்றாண்டில் பல இனிப்பு சமையல் குறிப்புக்கள் உள்ளன. அதில் முஹம்மது பின் ஹசன் அல் பாக்தாடியில் சமையல் நூலில் உள்ளதை இந்த உணவாக பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த உணவானது மத்தியகால இந்தியாவுக்கு பாரசீக மொழி பேசும் துருக்கிய படையெடுப்பாளர்கள் கொண்டு வந்தனர். 15ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஜிலேபியானது குண்டலிகா அல்லது ஜலவல்லிகா என அறியப்பட்டது. 1450 ல் சைன எழுத்தாளரான ஜைனசுரா இயற்றிய பிரியம்கார் நாரகதா என்ற நூலில் பணக்கார வியாபாரிகளால் நடத்தப்பட்ட ஓர் இரவு விருந்து நிகழ்ச்சியில் ஜால்பிஸை இடம் பெற்றது குறிப்பிடுகிறது. கி பி 1600க்கு முந்தைய சமஸ்கிருத நூலன குன்யாகுநாதோபினி உணவுப்பொருட்கள் மற்றும் செய்முறையை பட்டியலிடுகிறது. அதில் நவீன ஜிலேபியை தயாரிக்கும் முறை குறிப்பிட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.

தகவல் – இளங்கோ கிருஷ்ணன்

#ஜூலாபியா, #ஜிலேபி, #ஹாப்ஸ்ன்_ஜாப்சன், #குன்யாகுநாதோபினி, #சமஸ்கிருதம், #ஜைனசுரா, #பிரியம்கார் #நாரகதா, #இனிப்பு, #சமையல்_குறிப்பு, #சமையல், #குறிப்பு, #சர்க்கரை, #இலங்கப்பட்டை, #ஈரான், #சோல்பியா, #திஹோனி, #விதை2விருட்சம், #ZULABIYA, #Gilabee, #Hopson_Japson, #Kunyakunadopini, #Sanskrit, #Jainasura, #Priyamgarh_Narakada, #Sweet, #Recipes, #Sugar, #Sweet, #Lavanga_Pattai, #Iran, #Sofia, #Tihoni, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: