Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, மெகாத் தொடர்களில் நடித்து அதன்பிறகு மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர், ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் சினேகிதி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்த படியாக விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.

“தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என்று பேசப்படுகிறதே… நீங்கள் எப்படி?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர் கூறியதாவது: “என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நான் நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

#Priya_Bhavani_Shankar, #பிரியா_பவானி_சங்கர், #விஷால், #ராகவா_லாரன்ஸ், #ஹரீஸ்_கல்யாண், #எஸ்_ஜே_சூர்யா, #பொம்மை, #மான்ஸ்டர், #அருண்_விஜய், #மாபியா, #நடிகை, #இந்தியன், #கமல், #கமல்ஹாசன், #உலகநாயகன், #விதை2விருட்சம், #Vishal, #Ragava_Lawrence, #Harish_Kalyan, #SJ_Surya, #Bommai, #Monster, #Arun_Vijay, #Mafia, #Actress, #Indian, #Kamal, #Kamalhasan, #Ulaga_Nayagan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seed2tree, #seedtotree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: