Monday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம்.

எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக ஆறியவுடன், ஒரு வடிகட்டியை பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டி எடுத்து அதனை ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இந்த‌ கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

இந்த கேரட் எண்ணெயை தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தடவிக் கொள்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது. இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

#கூந்தல், #முடி, #தலைமுடி, #கேசம், #சிகை, #மயிர், #கேரட், #கேரட்_எண்ணெய், #வைட்டமின், #சருமம், #தோல், #ஆலிவ், #தேங்காய், #எண்ணெய், #விதை2விருட்சம், #Hair, #braid, #carrot, #carrot_oil, #vitamin, #skin, #olive, #coconut, #oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply