வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்

வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்களை பார்க்கும் முன்பு ஒரு வங்கி சொத்துக்களை எப்படி ஏலம் விடுகிறது என்பதை தெரிந்து கொண்டு அதன்பிறகு அதில் உள்ள சிக்கல்களை பார்த்தால், இன்னும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
சொத்துக்களை வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது இருக்கும் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் பலர் கடன் வாங்குவோர் உண்டு. ஆனால் அவர்களில் சிலரால் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்ட இயலாமல் போகும்போது.. அந்த சொத்தை வாங்கியவருக்கு அதாவது கடன் பெற்றோருக்கு பலமுறை கடன்தொகையை கட்ட நினைவூட்டியும், எச்சரிக்கை செய்தும் கடன் வாங்கியவர், கடனை திருப்பிச் செலுத்தாத போது… கடன் கொடுத்த அந்த வங்கி, சட்டப்படி அந்த சொத்தினை தனது பராமரிப்பில் எடுத்து, அதனை பொது ஏலம் விட்டு அதில் வரும் தொகையில் வங்கி கடனின் அசல் மற்றும் வட்டியை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை கடன் வாங்கியவரிடம் ஒப்படைக்கும். சில நேரங்களில் சொத்து கிரையத் தொகையும் கடன் அசல்தொகை மற்றும் வட்டித் தொகையும் சமமாக இருக்கும்பட்சத்தில் கடன் வாங்கியவருக்கு எந்த தொகையை வங்கி வழங்காது. சிற்சில நேரங்களில் ஏலத்தில் கடன் தொகையை விட சொத்தின் விற்பனை தொகை குறைவாக ஏலம் போனால் அந்த ஏலத்தை ரத்துசெய்ய வங்கிக்கு உரிமை உண்டு.
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
ஒரு சொத்து வங்கி மூலம் ஏலத்துக்கு வரும்போது அதில் எந்தவிதமான வில்லங்கங்களும் இருக்காது தைரியமாக வாங்கலாம். ஆனால், அந்த சொத்துக்கான வரி செலுத்தாமல் இருந்தாலோ, நில உரிமையில் சிக்கல் போன்ற காரணங்களாலோ, அந்த சொத்துகளில் சிக்கல் மறைமுகமாக இருக்கும். ஆகவே ஒரு சொத்து அல்லது வீட்டை, வங்கி மூலமாக ஏலத்தில் எடுக்கும் முன்பு, அந்த சொத்து குறித்த முழுமையான பின்னணித் தகவல்களை ஆதாரப்பூர்வமாக தெரிந்து கொண்டு நன்கு சிந்தித்து பரிசீலித்து வாங்க வேண்டும்.
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
மேலும் பல நேரங்களில் ஏலத்துக்கு வரும் சொத்துகளின் மதிப்பு சந்தை மதிப்பைவிட மிக மிகக் குறைவாக இருக்கக் கூடும் ஆகவே அதுபோன்ற நேரங்களில் அந்த ஏலச் சொத்தினை வாங்கினால் அது வாங்குபவருக்கு லாபம் தருவதாக இருக்காது. ஆகையால் வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் இதுபோன்ற சொத்துகளை வாங்குவதில் வாங்குபவர் விழிப்போடு இருந்து அதீத கவனம் செலுத்தி, வாங்குபவருக்கு நட்டம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081
#வங்கி, #ஏலம், #ஏலச்_சொத்து, #வீடு, #நிலம், #நகை, #அடமானம், #கடன்_தொகை, #சிக்கல், #வில்லங்கம், #விதை2விருட்சம், #Bank, #Auction, #Auction_Property, #Home, #Land, #Jewelry, #Mortgage, #Loan_Amount, #Trouble, #encumbrance, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,