Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்-ன் ஸ்டோன் பென்ச் நிறுவனம். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், படத்தின் டிரெய்லர் 11ஆம் தேதி ம‌தியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெண்குயின் திரைப்படத்தின் டிரைலர் தமிழில் நடிகர் தனுஷ்-ம் தெலுங்கில் டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டார்கள்.

#கீர்த்தி_சுரேஷ், #தனுஷ், #மோகன்லால், #நானி, #பெண்குயின், #Penguin, #Keerthy_suresh, #விதை2விருட்சம், #Danush, #Mohanlal, #Nani, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: