அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)

பொதுவாக பக்தர்கள் தான் கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதுண்டு. ஆனால் இங்கே கடவுளாக வழிபடும் அம்மன், தனது பக்தர் ஒருவரிடம் தனக்கு கொலுசு வாங்கிக் கொடு என்று கேட்ட உண்மையான வரலாறு குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
- ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
- உங்கள் மனம் அலை பாயும் போது…
- அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
- தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
- வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்
திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள். பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது.
- பகவத் கீதை – இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல
- கீதா உபதேசம் – என் உடல் முழுதும் நடுங்குகிறது. மயிர்க்கூச்செறிகிறது! – இது அர்ச்சுனின் வாசகம்
- கீதா உபதேசம் – பாவம் செய்யத் தூண்டுதலாக இருப்பது எது?
திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார். மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை. பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை. இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப்படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப் பட்டிருந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
திருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார். தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார். ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர். ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார். அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில் தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.
- ஒரு ஆண், எப்படிப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவன், அதிர்ஷ்டசாலி
- உங்கள் வீட்டு திருமணம் – திட்டமிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்
- தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு
- திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்
- திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை
ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள். ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறாள்.
படித்தது
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
#கொலுசு, #திருமீயச்சூர், #அருளாட்சி, #அன்னை, #லலிதாம்பிகை, #அர்ச்சகர், #கால்_கொலுசு, #திருமீயச்சூர், #விதை2விருட்சம், #Kolusu, #Thirumaiyacur, #Mother, #Lalithambigai, #Archagar, #Kal_Kolusu, #Seed2tree, #Anklet, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
