Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை – நீதிமன்றத்தில் சிசிடிவி பதிவுகள் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் கொரொனா ஊரடங்கு நேரத்தையும் தாண்டி கடை திறந்திருந்து வைத்திருந்ததாக கூறி கடந்த மாதம் 19 ஆம் தேதி, சாத்தான் குளம் காவல்துறையினர் அந்த கடையினை நடத்திவந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்று மிகவும் கொடூரமான முறையில் அக்காவல்நிலைய போலீசாரால் தாக்கப்பட்டு இறந்து போன சம்பவம், தமிழ்நாட்டை தாண்டி, இந்தியாவையும் தாண்டி, ஏன் உலகளவில் பெரும் சர்ச்சைகளையும், கண்டனங்களையும் எழுப்பியது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி… ஸ்ரீதர் என்கிற காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் மேலும் 2 காவலர்கள் என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்து. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை தொடங்குகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை நேற்று வந்தடைந்தனர்

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்த சிசிடிவி பதிவுகளை சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (9ஆம் தேதி) ஒப்படைத்துள்ளார். நேற்று முன்தினம் (9ஆம் தேதி) மேலும் அவர் கூறியதாவது:

ஒப்படைக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை நீதிமன்றமும், தடயவியல் துறையும் ஆய்வு மேற்கொள்ளும் என்றும், தந்தை, மகன் மரணம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

#Sathankulam_Custodial_Death, #Madurai_Central_Jail, #CBCID, #CBI, #தந்தை_மகன்_மரணம், #மதுரை_மத்திய_சிறை, #ஐகோர்ட்_மதுரை_கிளை, #சிபிசிஐடி, #சிபிஐ, #ஜெயரான், #பென்னிக்ஸ் #சென்னை_உயர்நீதிமன்ற_மதுரை_கிளை, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Madras_High_Court_Madurai_Branch, #justiceforjayarajandbennix #justiceforjayarajandfenix

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: