Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: August 2020

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்
சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா? உணவு வகைகளில் இரண்டு வகை உண்டு. அவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு ஆகும். அசைவம் உண்பவர்கள் சைவ உணவையும் உண்பார்கள். ஆனால் சைவ உணவை விரும்புவர்கள் அசைவத்தை தொடமாட்டார்கள். இதுபோன்ற சைவ உணவு உண்பவர்களுக்கு ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. ஆம் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படு. அவ்வாறு ஏற்படும் அயோடின் பற்றாக்குறையின் விளைவாக அவர்களின் முன் கழுத்திலும் பக்கவாட்டிலும் தைராய்டு வீக்கமும் தைராய்டுச் சுரப்புக் குறைபாடும் உண்டாகும். இதனால் வளர்ச்சிக் குறைபாடுகளும் சில சிக்கல்களும் உண்டாகி ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். ஆகவே அத்தகைய சைவ உணவு உண்பர்கள் கண்டிப்பாக அவ்வப்போதோ அல்லது அடிக்கடியோ வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வந்தால் மேற்சொன்ன குறைபாட்டினை தவிர்க்க முடியும் என்கிறார்கள். #வெண்ணெய், #சைவம்,
அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ - வீடியோ உரத்த சிந்தனை அமைப்பின் பெங்களூர் கிளையும், டெக்னோ ப்ராடக்ட்ஸும் இணைந்து நடத்தும் இன்றைய (29-8-2020) இணையத்தின் படைப்பான பெங்களூர் டைரி-1 படிப்போரையும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரு. K.R.G. ஸ்ரீராமன் மகிழ்வுடன் வரவேற்றார். திரு. உதயம்ராம் ஒருங்கிணைத்ததோடு அனைவரையும் முதலில் அறிமுகப்படுத்தினார். கவிஞர் திரு. கண்ணதாசன் அழகு தமிழில் உலக அறிவுதான் இந்த மக்களின் உயிர்த்துடிப்பு என்று பங்களூரைப் பற்றி கவிதை படைத்தார். https://www.facebook.com/urathasinthanai/videos/1614538838708207/ கன்னடப் பெண்மணியான திருமதி. இந்திராஷரன் இரண்டு கன்னட பெண் எழுத்தாளர்களைப் பற்றி இனிய தமிழில் அருமையாக பேசினார். அனுபமா நிரஞ்சனா என்பவர் சமுதாய முன்னேற்றத்தைப் பற்றிய கதைகளையும், திரிவேணி உளவியல் பற்றிய நூல்களையும் எழுதி
இ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.

இ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.

இ . பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க. பெங்களூரு டைரி - 1 ………………………………இன்று 28.08.2020 வெள்ளிக்கிழமை இரவு 6.55 மணிக்கு Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86493424224?pwd=QkxYY3cvVVVwTlBPVWhBY21Ed1Fkdz09 Meeting ID: 864 9342 4224 Passcode: 646917 இந்நிகழ்ச்சி www.facebook.com/urathasinthanai/ என்ற முகவரியில் நேரலையிலும் ஒளிபரப்பாகிறது. இ . பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க. உரத்த சிந்தனை, விதை2விருட்சம், Uratha Sinthanai, vidhai2virucham, seedtotree, seed2tree, vidhaitovirutcham,
இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்

இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்

இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம் என்னதான் நாம் சருமத்தின் அழகை பேணிக் காத்தாலும், சில சமயங்களில் சருமத்தின் நிறம் மாறி கருமையாக காணப்படும் அந்த வகையில் உள்தொடையில் உண்டாகும் கருமை நிறம் என்பது தொடையின் அழகை சீர்குலைக்கும் விதமாக இருப்பதால் பலருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த குறையை போக்க உதவும் எளிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக‌... கொஞ்சம் நல்லெண்ணெயும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து உள்தொடையில் கருமை உள்ள இடத்தில் நன்றாக தடவி ஒரு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அந்த 10 நிமிடங்கள் கழித்து சாதாரணமாக நீங்கள் குளிப்பது போல் குளித்து விட வேண்டும். இவ்வாறே அன்றாடம் நீங்கள் செய்து வந்தால் உள்தொடையின் உண்டான அந்த கருமை நிறம் மாறி நல்லதொரு மாற்றம் தெரியும் என்கிறார்கள் அழகை பேணிக்காத்த அந்த காலத்து இளம்பெண்கள். #அழகு, #கருமை, #நல்லெண்
நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை, வேட்டி கவுன்

நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை, வேட்டி கவுன்

நவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை வேட்டி கவுன் இன்றைய மங்கையர் பலர், நமது பாரம்பரிய உடைகளை மறந்து அதி நவீன உடைகளுக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனால் சந்தையில் ஏகப்பட்ட‍ விதவிதான பெண்களுக்கான ஆடைகள் நிறைந்து காணப்படுகிறது. அவர்களின் நவீன ஆடைகளில் ஒன்றுதான் இந்த வேட்டி கவுன். இப்போது வேட்டி கவுன் இன்றைய நவீன மங்கையர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சௌகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது. #வேட்டி_கவுன், #வேட்டி_கௌன், #மங்கை, #பெண், #இளம்பெண், #உடை, #ஆடை, #இடுப்பு, #விதை2விருட்சம், #Dhoti_Gown, #Dhoti, #Gown, #Mangai, #Girl, #Teen,
கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?

கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?

கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா? ஒருவர் தன் பெயரில் இருக்கக்கூடிய பூர்வீக சொத்துக்களாக இருந்தாலும், அல்லது தன்னுடைய சுயசம்பாத்திய சொத்துக் களாக இருந்தாலும் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய வாரிசுதாரர்களில் யாரேனும் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நீக்கிவிட்டு, மீதம் உள்ளவர்களுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க நினைக்கும் தருணத்தில், சொத்து கொடுக்கப்படாமல் விலகிவிடும் நபர்களிடமிருந்து அவர்களுக்கான பாகத்திற்கு ஈட்டுத்தொகைக் கொடுத்துவிட்டு ,அவர்களிடமிருந்து எழுதி பதிவு செய்து கொள்ளும் ஒரு ஆவணமே விடுதலைபத்திரம் என்று சொல்லப்படுகின்றது. அப்படி ஒருவர் ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு அவற்றின் அனுபோக பாத்தியமும் கொடுத்துவிட்டால், அந்த சொத்தை மீண்டும் பெற இயலாது. ஆனால் ஈட்டுத்தொகை கொடுக்காமல் ஏமாற்றப் பட்டிருந்தால் நீத
சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது கேள்வி (1) - என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியான தீர்வு உங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும்
ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி

ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி

ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் - நாஞ்சில் சம்பத் அதிரடி அண்மையில் நியூஸ் தொலைக்காட்சியில் இருந்து விலகிய செந்தில்வேல், தமிழ் கேள்வி என்ற யூடியூப் சேனலை தொடங்கி யுள்ளார். அதில் பல்வேறு பிரமுகர்களிடம் அனல் பறக்க கேள்விகளை கேட்டு, விளக்கங்களை பெற்று வருகிறார். அந்த வகையில் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் ஜூம் காணொலி வழியாக‌ நேர்காணல் நடத்தினார். இதோ அந்த நேர்காணலின் சிலவற்றை இங்கே காணவும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எழுச்சி ஏற்படும் என்பதெல்லாம் மாயை என்றும் இதனால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திரு க்கிறார். ரஜினிகாந்தின் எந்தப்படம் முழுமையாக ஓடியிருக்கிறது என வினவிய அவர், தாம் தமிழ்நாடு முழுவதும் சுற்றியவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன் ரஜினி வந்தால் திமுகவுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது எனத் தெரிவித்திருக்கிறார். ரஜ
நடிகை அதிரடி முடிவு – மற்ற நடிகைகள் அதிர்ச்சி

நடிகை அதிரடி முடிவு – மற்ற நடிகைகள் அதிர்ச்சி

நடிகை அதிரடி முடிவு - மற்ற நடிகைகள் அதிர்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல திரைப் படங்களில் நடித்தத‍ன் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷிகண்ணா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் இவர் கூறியுள்ளதாவது; படத்தில் நடிக்கும்போது கதை தேர்வில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். ஒருவேளை கதைப் பிடிக்கவில்லை என்றால் எத்தனை பணம் தந்தாலும் நான் நடிக்க மாட்டேன். ஒரு நடிகை என்பவருக்கு தனது ஆத்ம திருப்தி தான் முக்கியம் பணம் அல்ல… படம் தோல்வி அடைவது ஏன் எனக் கேட்டால்… அது கதை சொல்லும் விதம் வேறுவிதமாக உள்ளது. அது படமாக வெளியாகும்போது வேறுவிதமாக வெளியாகிறது. ஆனால் நல்ல கதையாக இருந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் நான் தயார் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதனால் இவருக்கு போட்ட
பாடகர் SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பாடகர் SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

பாடகர் SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற மூத்த நடிகர்கள் ஆரம்பித்து இன்றைய இளம் நடிகர்கள் அனைவருக்கும் பாடல்களை பாடியுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரே வீடியோ ஒன்று வெளியிட்டார். இந்நிலையில் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோக்ளை வெளியிட்டு வருகிறார். இன்று வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார். அந்த மருத்துவமனை நி
அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது. உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க . குறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி