Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி

ரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி

அண்மையில் நியூஸ் தொலைக்காட்சியில் இருந்து விலகிய செந்தில்வேல், தமிழ் கேள்வி என்ற யூடியூப் சேனலை தொடங்கி யுள்ளார். அதில் பல்வேறு பிரமுகர்களிடம் அனல் பறக்க கேள்விகளை கேட்டு, விளக்கங்களை பெற்று வருகிறார். அந்த வகையில் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் ஜூம் காணொலி வழியாக‌ நேர்காணல் நடத்தினார். இதோ அந்த நேர்காணலின் சிலவற்றை இங்கே காணவும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எழுச்சி ஏற்படும் என்பதெல்லாம் மாயை என்றும் இதனால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திரு க்கிறார். ரஜினிகாந்தின் எந்தப்படம் முழுமையாக ஓடியிருக்கிறது என வினவிய அவர், தாம் தமிழ்நாடு முழுவதும் சுற்றியவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன் ரஜினி வந்தால் திமுகவுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது எனத் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரை நம்பியிருந்த வர்களுக்கே இன்று 50 வயதை கடந்துவிட்டது எனக் கூறிய நாஞ்சில் சம்பத், ரஜினி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டி யிட்டால் தொகுதிக்கு 500 ஓட்டுக்கள் தான் வாங்குவார் எனக் கூறியிருக்கிறார். இதுதான் யதார்த்த நிலை என்றும் இது புரியாமல் அவரை வைத்து மாயையை உருவாக்கி வருவதாக வும் விமர்சித்திருக்கிறார். பத்திரிகையாளர் செந்தில் நடத்திய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கமல்ஹாசனை பொறுத்தவரை கட்சி தொடங்கிவிட்டோமே என்ற கட்டாயத்திலும் வருத்தத்திலும் கட்சி நடத்தி வருவதாக வும், தன்னால் எந்த தாக்கத்தையும் உருவாக்க முடியாது என்பது அவருக்கே தெரியும் எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் ஆகியோரால் தமிழக அரசியல் களத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக- அமமுக இணைவதற்கு வாய்ப்பில்லை என்றும் சசிகலாவை பொறுத்த வரை தனக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் தோளில் சுமந்து பயணிக்க விரும்ப மாட்டார் என்பதே தனது கணிப்பு எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். அதிமுக சிதறிய நிலையில் உள்ளதாகவும் தேர்தல் நெருக்கத்தில் இன்னும் பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

#நாஞ்சில்_சம்பத், #சம்பத், #அதிமுக, #திமுக, #அமமுக, #செந்தில்வேல், #நியூஸ்18, #மக்கள்_நீதி_மய்யம், #கமல், #ரஜினி, #ரஜினிகாந்த், #சசிகலா, #விதை2விருட்சம், #Nanjil_Sampath, #Sampath, #AIADMK, #DMK, #AIADMK, #Senthilvale, #News18, #Makkal_Needhi_Maiyam, #Kamal, #Rajini, #Rajinikanth, #Sasikala, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: