Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

கேள்வி (1) – என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சரியான தீர்வு

உங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும் – தெரியாததும்” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட நூலில் அரசின் கவனத்திற்கு நூலாசிரியரின் வேண்டுகோள் என்ற குறுந்தலைப்பில் பட்டா மாற்றலில் ஏற்படும் சிரமங்களைக் களைய வேண்டி என்னுடைய கருத்துக்களை நான் அரசிற்குத் தெரிவித்திரு க்கிறேன். மேலும், கிரயம் செய்யப்பட்ட சொத்து முழுமையாக ஒரே பெயரில் இருக்குமேயானால் அதன் பட்டா தற்போது உடனடியாக மாறிவிடுகின்றது. இதுவே ஒரு வெற்றி தான். இரண்டு ஆண்டுகளுக்குமுன் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற எனது வேண்டுகோளின் ஒரு பகுதி:-

கடந்த ஆகத்து மாதம் 2019ஆம் ஆண்டு வெயிடப்பட்ட தெரிந்ததும் – தெரியாததும் தொகுதி மூன்று என்ற நூலில், 159 முதல் 161 வரை உள்ள பக்கங்களில் அரசின் கவனத்திற்கு நூலாசிரியரின் வேண்டுகோள் என்ற குறுந்தலைப்பின் கீழ் சொத்து வாங்குவதிலும் பட்டா மாற்றுவதிலும் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் பற்றியும், அவற்றிற்காண தீர்வுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட அளவற்ற சிரமங்களையும், தேவையற்ற அலைச்சல்களையும் தவிர்க்கும் பொருட்டுக் கொடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு தழ்நாடு அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்ட சீர்திருத்தம் பற்றி கடந்த 16..02.2020 மற்றும் 29.02.2020 ஆகிய தினங்களில் திருச்சி தினமலர் நாளிதழில் வெளியிட்டுள்ள செய்தி வழியாக அறிந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமை அளிக்கின்றது. இப்படிப்பட்ட சட்ட சீர்திருத்தம் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவதில் பெருமை அடைகிறேன்.

மிகப்பல ஆண்டுகளாக எந்த அரசும் பொதுமக்களின் அளவற்ற சிரமங்களையும், தேவையற்ற அலைச்சல்களையும் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத போது தற்போதைய அரசு இவற்றைக் கலையவேண்டி முனைப்புடன் செயல் பட்டதற்கு மக்கள் சார்பாக என்னுடைய உளமார்ந்த நன்றியினைத் தமிழ்நாடு அரசிற்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் சொத்து வாங்குவதிலும், தற்போது இருக்கின்ற சொத்துக்களை முறையாக தங்களின் வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுப்பதிலும், இதுபற்றி விவரம் அறியாத ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் அவர்களுடைய சொத்துக்கள் பதியப்படுவதற்குமுன் சட்ட வழிமுறைகளைச் சரிவர பின்பற்றாமல் பத்திரப்பதிவு செய்துவிட்டு பிற்காலத்தில் பல மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்ற மக்களுக்கு முன்கூட்டியே பதிவுசெய்யப்போகும் ஆவணத்தை மாவட்டம் வாரியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசு நிர்ணயிக்கப்பட்ட சட்ட வல்லுனர்களால் (120 நாட்களுக்குள்) பரிசீலனைசெய்து அதன் பின்னர் பத்திரப் பதிவு செய்வது போன்ற சீர்திருத்தம் கொண்டுவந்தால் மக்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், முறையாக அரசு அங்கீகாரம் பெறப் படாத மனைகளை ஏழை எளிய விவரம் அறியாத மக்கள் வாங்கி விட்டுப் பின்னர் பல நிலைகளில் பரிதவிக்கும் மக்களுக்கும், இந்தச் சட்டம் ஒரு நல்ல தீர்வாகவே அமையும். இதனால், ஒருவர் வாங்கக் கூடிய சொத்துக்கள் முன்கூட்டியே சட்டப்படி சரிபார்க்கப் படுவதனால் அநேக மக்கள் இதனால் பயனடைவார்கள் என்பதும் உண்மையே.

ஆக, உங்களின் குறை நீண்டகாலமாகவே இருந்து வரும் ஒன்றுதான். எனவே நீங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி தேவையானால் ஒரு திருத்தல் பாத்திரம் போட்டு நீங்கள் உங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

C. Rasappa
Treasury Officer (Rtd.)

#சொத்து, #பஞ்சாயத்து, #பத்திரம், #சட்டம், #பட்டா, #வட்டாட்சியர், #சட்ட_சீர்திருத்தம், #வீட்டுக்கடன், #வீடு, #கடன், #விதை2விருட்சம், #Property, #Panchayat, #Deed, #Law, #Patta, #Governor, #Legal_Reform, #Home_Loan, #Home, #Debt, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

One Comment

 • ஐயா,

  இதுநாள் வரை இலவச சட்ட ஆலோசனை சேவை இணையம் வழியாக நான் அனுப்பிய ஆலோசனைகளுக்கு வாசகர்களின் கருத்துக்கள் எதாவது இருப்பின் எனது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  அவைகளே என்னுடைய உற்சாகத்தை நெறிப்படுத்துவதற்கும் மற்றும் தூண்டுவதற்கும் உதவும் என நான் நினைக்கின்றேன்.

  நன்றி வணக்கம்.

  குமர. ராசப்பா
  சார் பதிவாளர் & கருவூல அதிகாரி (Rtd.)

Leave a Reply

%d bloggers like this: