Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

உரத்த சிந்தனை அமைப்பின் பெங்களூர் கிளையும், டெக்னோ ப்ராடக்ட்ஸும் இணைந்து நடத்தும் இன்றைய (29-8-2020) இணையத்தின் படைப்பான பெங்களூர் டைரி-1 படிப்போரையும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரு. K.R.G. ஸ்ரீராமன் மகிழ்வுடன் வரவேற்றார். திரு. உதயம்ராம் ஒருங்கிணைத்ததோடு அனைவரையும் முதலில் அறிமுகப்படுத்தினார். கவிஞர் திரு. கண்ணதாசன் அழகு தமிழில் உலக அறிவுதான் இந்த மக்களின் உயிர்த்துடிப்பு என்று பங்களூரைப் பற்றி கவிதை படைத்தார்.

கன்னடப் பெண்மணியான திருமதி. இந்திராஷரன் இரண்டு கன்னட பெண் எழுத்தாளர்களைப் பற்றி இனிய தமிழில் அருமையாக பேசினார். அனுபமா நிரஞ்சனா என்பவர் சமுதாய முன்னேற்றத்தைப் பற்றிய கதைகளையும், திரிவேணி உளவியல் பற்றிய நூல்களையும் எழுதியதாகக் கூறினார். கார்ட்டூனிஸ்ட் திரு. ஸ்ரீகாந்த் பங்களூரில் விதான் சௌதாலால் பாக் போன்ற சுற்றுலாத் தலங்களை அழகு ஓவியமாகத்தில் வரைந்ததைக் காண்பித்தார். திருமதி.ரஜிதா கோபால் அவர்கள் கப்பன் பூங்கா, அல்சூர் ஏரி, நந்தி ஹில்ஸில்- சூரிய உதயம், அஸ்தமனம், போன்ற சுற்றுலாத் தலங்களைக் காண்பித்தார்.

திருமதி. ஷியாமளா சங்கர் பங்களூரில் உள்ள ஆலயங்களான Bull temple, காவல் தெய்வமான ஹனுமன், மல்லேஸ்வரம் வேணு கோபாலசாமி கோயில், காடு மல்லேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் ஆகிய இடங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் சென்றார். திருமதி. துளசி பட் அவர்கள், கல்தோசை, CIROTI, வெண்ணை தோசை, தட்டை இட்லி, பிஸிபேளா பாத், 20 விதமான போளிகள் ஆகியவற்றைக் காண்பித்து இணையத்தில் இனிய விருந்து படைத்தார். திரு.டெக்னோ முரளி ஸ்ரீநிவாஸ் அனைவர் பேசியதைப் பற்றி சிறப்பாகக் கூறி வாழ்த்துரை வழங்கினார். வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் அருமையாக அனைவருக்கும் நன்றி கூறினார். இடையிடையே தன் கருத்துக்களைக் கூறி பேச்சாளர்களை ஊக்குவித்து இந்த நிகழ்ச்சியை திருமதி. பத்மினி பட்டாபிராமன் நேர்த்தியாக நெறிப்படுத்தினார்.

எழுத்து – ஜி சுப்ரமணியம்

#உரத்த_சிந்தனை, #ஜூம், #பிஸிபேளாபாத், #போளி, #டெக்னோ_முரளி, #உதயம்ராம், #விதை2விருட்சம், #பெங்களூரு, #ஜூம், #கர்நாடகா, #uratha_sinthanai, #uratha sindhanai, #Zoom, #Bisibelabath, #Poli, #Techno_Murali, #Udhayam_Ram, #vidhai2virutcham, #Bangalore, #Bangaluru, #Karnataka, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply