என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும் ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவிக்குச் சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
ராகவன், திருப்பத்தூர்
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
- கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?
- சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது
- ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
- வங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்
- உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
- ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்
விடை:- மாயாண்டி அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப் பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் சமபாகம் கொடுத்து அதன் முழு அனுபோக பாத்தியத்துடன் முறையாக தானப்பத்திரம் எழுதி பதியப்பட்டு விட்டால் அந்த தானப்பத்திரம் ரத்து செய்யப்படுவதற்கு ஏற்புடையது அல்ல. மேலும், அதனை வற்புறுத்தி ரத்து செய்ய வைத்ததும் சட்டப்படி ஏற்க முடியாதது. கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வாரிசுரிமை திருத்தச் சட்டம் பிரிவு 39 இன்படி பூர்வீக சொத்தில் அனைத்து பெண் வாரிசுகளுக்கும் சமபாகம் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். அதை விடுத்து, இரண்டாவது மருமகன் தன்னுடைய மாமனாரை மிரட்டி அனைத்து சொத்துக் களையும் தன் பெயரிலேயே ஏற்பாடு ஆவணத்தின் மூலம் சொத்து மற்றம் செய்து கொண்டதும் சட்டப்படி குற்றமே. மேலும் மருமகன் என்பவர் ரத்த சம்பந்தமான செட்டில்மெண்ட் உறவுகளில் வரமாட்டார்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
ஆனால் மகள் மட்டுமே ரத்த சம்பந்தமான உறவுகளில் வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மூன்றாம் நபர்களுக்கிடையில் நடக்கும் செட்டில்மெண்டாக கருதப்பட்டதால் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் மாறுபட்டிருக்க வேண்டும். அது இல்லை யென்றாலும் செட்டில்மெண்ட் செல்லாது. எனவே பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றால், இவருக்குச் சாதகமாக நீதி கிடைக்க வாய்ப்புள்ளது.
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
- பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
- இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்
(மேற்கொண்டு தெளிவுபெற சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநர்களையோ அல்லது சட்ட நூல்களையோ படித்துப் புரிந்து கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் என்னுடைய ஆலோசனைகள் மட்டுமே)
=> Coumarasamy Rasappa (Sub-Registrar & Treasury Officer (Rtd.,))
#தானப்_பத்திரம், #தானம், #பதிவுக்கட்டணம், #முத்திரைத்தாள், #ஸ்டாம்ப், #வாரிசு, #சொத்து, #உரிமை, #தந்தை, #மகன், #விதை2விருட்சம், #Gift_Deed, #donation, #registration_fee, #stamp, #heir, #property, #title, #father, #son, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,