Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்..

வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்டும் மகன் மகளுக்குச் சமமாகப் பிரித்துத்தான் கொடுக்க வேண்டுமா?

=> ராகவன். நான் சிதம்பரம்

விடை:- தானம் பெறுபவரின் ஒப்புதலோடு, 8% முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் 4% பதிவுக்கட்டணமும் செலுத்தி பத்திரப் பதிவின் மூலம் முறையாக தானம் கொடுத்த சொத்தைத் திரும்பப் பெற இயலாது. அது தானம் பெற்றவருக்குச் சொந்தமான சொத்து. ஆகவே, எந்த சொத்தாக இருந்தாலும் சட்டப்படி தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால், அன்றைய தேதி முதல் அந்த சொத்து அவருக்குச் சொந்தப்பட்ட சொத்தாகவே கருதப்படும்.

இதேபோல் ஒரு விழுக்காடு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி செட்டில்மெண்ட் செய்து முழுசொத்தின் அனுபவ உரிமையினைக் கொடுத்திருந் தாலும் இதே நிலைதான். ஆக, தானம், என்றாலும், செட்டில் மெண்ட் என்றாலும், உரிமை மாற்றப்பட்ட சொத்து என்று பொருள். எனவே, உங்கள் மனைவிக்குத் தானமாகக் கிடைத்த சொத்தை பொறுத்தவரை உங்கள் மனைவியின் காலத்திலேயே அந்த சொத்தை அவர் யாருக்கு வேண்டு மானாலும் சொத்து மாற்றம் செய்துகொடுக்கலாம். ஆனால் அவருடைய காலத்திலேயே மேற்கண்ட பாகசொத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென்றால். அவருடைய காலத்திற்குப் பின்னர் அவருக்குத் தானமாகக் கிடைக்கப்பெற்ற சொத்து அவருடைய சந்ததியினருக்குப் பூர்வீக சொத்தாக மாறுவதால், அவருடைய மகன் மற்றும் மகள் இருவரும் தன் தாய்க்கு தானமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தைச் சமமாக பிரித்துக் கொள்வார்கள். இதில் வேறு யாரும் தலையிட முடியாது.

=> Coumarasamy Rasappa (Sub-Registrar & Treasury Officer (Rtd.,))

#தானப்_பத்திரம், #தானம், #பதிவுக்கட்டணம், #முத்திரைத்தாள், #ஸ்டாம்ப், #வாரிசு, #சொத்து, #உரிமை, #தந்தை, #மகன், #விதை2விருட்சம், #Gift_Deed, #donation, #registration_fee, #stamp, #heir, #property, #title, #father, #son, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

2 Comments

  • Venkatesh

    Vanakam sir, Yennodiya name Venkatesh, Yenoda appa mayilvelsamy avarathu appa manickam vitam irunthu 5cent(2180 Sq.ft) land thaana settlement(2007) yeluthi vangi ullar.aathil 5 centku undana document aanithum sariyaka ullathu(Live FMB, Patta, A-register) ,but ipo moola pathiram Patti parthal 4.15cent,(30*60)mattum irukirathu,yenodiya thatha 1967 aandru intha land vangi irukaru apo land measuresment thappa podudanga… Indru vaari engalin anupavathil thaan intha land iruku.. Ipo engal aarukil iruparvargal engal landa neenga use pannidu irukinganu problem panranga, intha problema yeppadi solve panrathu.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: