Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? – அடேங்கப்பா

ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? – அடேங்கப்பா

மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க பெண் வீட்டிற்கு வருவார்கள் அப்போது மாப்பிள்ளையிடம் பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்பார்கள். மாப்பிள்ளையும் பிடித்திருக்கிறது என்பது போன்று சைகை மூலமாகவோ அல்ல்து ஆம் என்று சொல்லியோ தனது முடிவை தெரிவிப்பார். ஆனால் பெண்ணிடன் அந்த ஆணை பிடித்திருக்கிறதா என்று கேட்டால், அந்த பெண் மௌனமாக இருந்தால் உடனே அங்கு கூடியிருப்பவர்கள், மௌனம் சம்ம‍தத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டு உடனே திருமணத்திற்கான அடுத்த‍க்கட்ட‍ வேலையை தொடங்குவார்.

இதுபோன்ற தருணங்கள் நம்மில் பலர் அனுபவித்திருப்போம். சிலர் திரைப்படங்ளில் பார்த்திருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்கள் இருக்கிறது என்பதை உலகத்தமிழ் மங்கையர் மலரின் நல்லநேரம் Nalla Nehram என்ற முகநூல் பக்கத்தில் அற்புதமாக கவிதை வடிவில் விளக்கியுள்ளார்கள். நான் படித்து ரசித்ததை நீங்களும் ரசிக்கவேண்டும் ஆவலில் இங்கே பகிர்கிறேன்.

வரன் பார்த்து
வாழ்க்கை வரமாகும்
நேரத்தில் …,
பெண்மையின் மௌனம்
‘சம்மதம் ‘!

பிறந்த வீடு பிரிந்து
புகுந்த வீடு
புகும் வேளையில்…,
பெண்மையின் மௌனம்
“பாசம்”

முதன்முதலாய்
முகம் பார்த்து பேசும்
மணவாளனுக்கு …….
பதில் பேசாத
பெண்மையின் மௌனம்
‘நாணம் ‘!

இதுவரை
பழகிடாத எதார்த்தத்தை
பிடித்தவருக்காக
ஏற்றுக்கொள்ளும்போது ,
பெண்மையின் மௌனம்
‘தியாகம்’ !

சொல்லித் தீர்த்துவிட
வேண்டிய விஷயத்தை …,
சொல்லமுடியாமலே போன
சூழ்நிலையில் …..
பெண்மையின் மௌனம்
‘கண்ணீர் ‘!

எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களான போது ,
பெண்மையின் மௌனம்
‘வேதனை ‘!

ஏங்கித்தவித்த விஷயமொன்று
எதிர்பார்க்காமல் கிடைக்கும்
தருணத்தில் …
பெண்மையின் மௌனம்
‘களிப்பு ‘!

உண்மைக்கோ ,
பெண்மைக்கோ
களங்கமென்ற
சமயத்தில்…
பெண்மையின் மௌனம்
‘கோபம் ‘!

தாவணி உடுத்திய
கன்னியவள் …
தாய்மையென்னும் கண்ணியத்தை
உணரும் போது…
பெண்மையின் மௌனம்
‘பேரானந்தம் ‘!

வெளிவரும் வார்த்தைகளே
அர்த்தப்ப்படுமானால் …,
ஆயிரம் சூழ்நிலைகளில்
வெளிப்படாத …..
பெண்மையின் மௌனம்
“பொக்கிஷம்

#மௌனம், #பொக்கிஷம், #பேரானந்தம், #கோபம், #களிப்பு, #வேதனை, #கண்ணீர், #தியாகம், #நாணம், #பாசம், #சம்மதம், #பெண்ணின்_மௌனம், #விதை2விருட்சம், #Silence, #treasure, #rapture, #anger, #joy, #pain, #tears, #sacrifice, #shame, #affection, #consent, #woman’s_silence, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply