Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனுபவம் புதுமை – வீடியோ

அனுபவம் புதுமை – வீடியோ

உரத்த சிந்தனை அமைப்பும், தபம்ஸ் குழுவும் இணைந்து பயணித்த அனுபவம் புதுமை -7 பயணத் தொடரில் அனைவரையும் கவிதை வடிவில் கவிஞர். திரு. கோவை கோகிலன் வரவேற்றார். திருமதி. பத்மினிபட்டாபிராமன் திருவண்ணா மலையின் திரு.சண்முகத்தின் விருந்தோம்பல் பண்பைப் போற்றி அறிமுகப்படுத்தினார்.

திரு. சண்முகம் நம்மை துபாயில் உள்ள உலகிலேயே உயர்ந்த கட்டிடமான BURJ KHALIFA – வுக்கு அழைத்துச்சென்றார். ஒட்டகச் சவாரி செய்தது, கலப்படமற்ற சுத்தத் தங்கக் கடைகள், அபுதாபி அரசரின் அரண்மனை, சைனா Market, பிரபலமான அபுதாபி மசூதி ஆகியவற்றைக் காண்பித்தார். அடுத்து நம்மை கென்யாவில் உள்ள நைரோபி, MOMBASA. KISUMU மற்ற சில நகரங்களின் Aerial view காண்பித்தார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள், கென்யா நாட்டின் சொந்த மக்களைவிட அதிகம் ஊதியம் பெறுவதோடு, நல்மதிப்புடனும் விளங்குவதாகக் கூறினார்.

விட்டேனா பார்’ என்று திருமதி.பத்மினியும், திரு.பட்டாபிராமன் அவர்களும் மேலும் கென்யா பற்றிய தகவல்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தனர். திருமதி. மனோன்மணி சிறப்பாக நன்றிகூறினார். Dr.திரு.மேகநாதன் பயண அனுபவத்தை அருமையாகக் கூறியதோடு, நேர்த்தியாக நிகழ்ச்சியை நெறிப் படுத்தினார். முதன்முறையாக கலந்துகொண்ட இலக்கிய வள்ளல் மாம்பலம் சந்திரசேகரும், கென்யா பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்

செய்தி தொகுப்பு = > ஜி.சுப்பிரமணியன்
படங்கள் => ஆபிஸ் பையன்

#உரத்த_சிந்தனை, #விதை2விருட்சம், #ஜூம், #துபாய், #திருண்ணாமலை_சண்முகம், #மாம்பலம்_சந்திரசேகர், #Uratha_Sindhanai, #vidhai2virutcham, #Zoom, #Dubai, #Thiruvannamalai_Shanmugam, #Mambalam_Chandrasekar, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply