Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

நேற்று (07.10.2020) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஆடும் கூத்து திரைப்படத்தில் நடித்ததை குறிப்பிட்டு பேசினார்‍. அந்த ஆடும்கூத்து திரைப்படம் குறித்து…

க‌டந்த 2005ஆம் ஆண்டு பெரும் நெருக்கடியில் திரைக்காவிய மான திரைப்படம்தான் ஆடும் கூத்து என்ற திரைப்படம் எடுக்க‍ப்பட்டது. இந்த திரைப்படம் வெள்ளித் திரையை அலங்கரிக்க‍ வில்லை என்பதை நடிகர் ஆரி குறிப்பிட்டு சொன்ன‍ போது என்னால் நம்ப முடியவில்லை. எப்ப‍டி இந்தளவுக்கு கதையம்சம் கொண்ட திரைப்படம், வெள்ளித் திரையை அலங்கரிக்காமல் போனது என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் திரை ரசிகர்களுக்கு மா பெரும் இழப்பே.

இந்த திரைப்படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த‍ நினைவு. அந்த திரைப்படம், சற்று வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருந்ததால் எனது கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். அதோடு நில்லாமல் எனது குடும்பத்தாரை காண வைத்தேன் அவர்களும் அந்த திரைப்படத்தை ரசித்து பார்த்த‍னர்.

இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர், ஆரி கதாநாயகனாக நடித்துள்ளார். பாவாடை தாவணி அணிந்து இரட்டை ஜடையுடன் ஒரு கிராமத்து பெண்ணாகவே வாழந்திருக்கிறார் நடிகை நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் வழக்கம் போலவே மிரட்டி இருப்பார். சேரன் தனது அற்புதமான நடிப்பாற்றலை இதில் வெளிக்காட்டி இருப்பார்.

இதுபோன்ற வித்தியாசமான கதையமைப்புடன் கூடிய திரைப்படத்தை என் வாழ்நாளில் நான் பார்த்த‍துமில்லை. இனி பார்க்க‍ப் போவதுமில்லை. அந்த அளவுக்கு அருமையான திரைக்காவியாக என் கண்களுக்கு தெரிந்தது.

இந்த திரைப்படத்தில் மணிமேகலாவாக நவ்யா நாயர் (கதா நாயகி), ஞானசேகரனாக நடிகர் சேரன், மோசமான ஜமீந்தாராக நடிகர் பிரகாஷ்ராஜ், முத்துவாக அகில் குமார் (ஆரி) ஜமீந்தாரின் மகனாகவும் பேரனாகவும் நடிகர் சீமான், தாழ்த்தப் பட்ட இனத்தின் பெண்ணாக ஆச்சி மனோரமா நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப் பாளர், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட‌ அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் வாயிலாக நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் கதைச்சுருக்க‍ம்

மணிமேகலா (நவ்யா நாயர்) கல்லூரியில் படிக்கும் ஒரு கிராமத்துப் பெண். பிறர் கண்களுக்குத் தெரியாத காட்சிகள் இவள் கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் அவள் சொல்வதை யாரும் நம்புவதில்லை. பின்னர் நடக்கும் நிகழ்ச்சிகள் அவள் கூறுவது உண்மையென உணர்த்துகின்றன. அவ்வாறு நிகழ்ச்சிகள் தோன்றும் போது அவள் பண்ணும் கலாட்டா பெரிதாக இருக்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், அவள் காணும் நிகழ்வுகள், அவளது காதலன் முத்து (அகில் குமார்) அவளுக்குப் பரிசளித்த வளையலிலிருத்து தோன்றும் ஒரு கற்பனைத் திரையில் ஓடும் திரைப்படக் காட்சிகளாகத் தோன்றுவதுதான். அந்த வளையல் உருக்கிய செல்லுலாய்டால் செய்யப்பட்டது. தெருக்கூத்து ஆடும் ஒரு காதல் சோடியை (சேரன், நவ்யா நாயர்) ஒரு கெட்ட ஜமீந்தார் (பிரகாஷ் ராஜ்) கொடுமைப்படுத்தி அந்த பெண்ணின் தலையை மொட்டை யடித்து விடுவது போன்ற காட்சிகள் தான் அவள் காண்பது. அவளது திருமண நாளன்றும் அவளுக்கு அக்காட்சிகள் தோன்ற அவள் செய்யும் ஆர்ப்பாட்டத்தால் திருமணம் நின்று விடுகிறது. பின்பு அவளது நிலையைப் புரிந்து கொள்ளும் முத்து அவளோடு சேர்ந்து உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முற்சிக்கிறான்.

அந்த முயற்சியில் ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மூலமாக பாதியிலேயே நின்று போன ஒரு திரைப்படத்தின் கதை இது என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. 1970 களின் பிற்பகுதி யில் ஒரு இளம் இயக்குநர் ஞானசேகரன் (சேரன்) இக்கதையைத் திரைப்படமாக்கத் தொடங்கி அது பாதியிலேயே நின்று போகிறது. இந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தான் அப்படத்தில் ஜமீந்தாராக நடித்தவர். ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தான் இத்திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது. அந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகி முதலில் தன் தலையை மொட்டையடித்துக் கொள்ள மறுக்கிறாள். ஆனால் திரைப்படம் நன்றாக அமைய அக்காட்சி உண்மையாக இருக்க வேண்டுமென்ற இயக்குனரின் வற்புறுத்தலால் பின் சம்மதிக்கிறாள். அந்த ஜமீந்தாரின் மகன் (சீமான்) திரைப்படம் எடுக்கும் இடத்திற்கு வந்து, மொட்டையடிக்கும் காட்சி தனது தந்தையின் பெயரைக் கெடுத்துவிடும் எனவே அதை எடுக்கக் கூடாது எனத் தடுக்கிறான். ஓய்வுபெற்ற ஆசிரியர் இது திரைப் படக் கற்பனைக் காட்சிதானே எனக்கூறி அவனைச் சமாதானப் படுத்துகிறார். ஆனால் ஜமீந்தாரின் மகன் அடியாட்களுடன் திரும்பி வந்து கலவரம் செய்கிறான். மன உளைச்சலுக்கு ஆளாகும் கதாநாயகி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்ள திரைப்படம் நின்றுபோகிறது. ஞானசேகரன் தலை மறைவாகி, ஜமீந்தார் மகனைப் பழிவாங்க தனது புரட்சித் தோழர்களோடு திரும்பி வரும்போது அவசரநிலை அறிவிக்கப் பட்டிருந்த அச்சூழலில் காவல் துறையால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

மணிமேகலை அதே கிராமத்துக்குச் சென்று இதைப்பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கச் செல்வதும் அங்கு நடந்த கதையை நேரில் பார்த்த சாட்சியாக ஒரு தாழ்த்தப்பட்ட இனப்பெண்ணை (மனோரமா) சந்திப்பதும் அந்த ஜமீந்தாரின் பேரனை (இவரும் சீமான்) நேர்காணலும் ஆடும் கூத்து திரைக்கதையின் தொடர் நிகழ்ச்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

எழுத்து – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (கைபேசி – 98841 93081)
கதைச்சுருக்க‍ம் – விக்கி பீடியா

#பிக்பாஸ்_ஆரி_குறிப்பிட்ட_ஆடும்_கூத்து_திரைப்படம்_குறித்து, #பிக்பாஸ், #ஆரி, #நவ்யா_நாயர், #நடிகை, #சேரன், #பிரகாஷ்ராஜ், #மனோரமா, #ஆச்சி, #ஆடும்_கூத்து, #சீமான், #அகில்குமார், #விதை2விருட்சம், #BIGGBOSS, #AARI, #ARI, #AADUM_KOOTHU, #NAVYA_NAIR, #CHERAN, #PRAKASH_RAJ, #MANORAMA, #AACHI, #SEEMAN, #AGILKUMAR, #VIDHAI2VIRUTCHAM, #VIDHAITOVIRUTCHAM, #SEEDTOTREE, #SEED2TREE,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: