ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியான தகவலுக்கு…

கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் டிரண்டாகி வரும் ரஜினி வெளியிட்டதாக இருந்த அறிக்கையில்… தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் தனது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் டிசம்பருக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு பரபரப்பான விவாதத்திற்கு வித்திட்டது.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
ஆனால் தற்போது அந்த அறிக்கை தொடர்பாகவும், அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் பரபரப்பு தொடர்பாகவும் ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்”. இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
கரோனா அச்சுறுத்தல் என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே ‘அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பிலும் ரஜினி கலந்து கொள்ள வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாக கவனிக்கப் படுகிறது.
#ரஜினி, #ரஜினிகாந்த், #கொரோனா, #அரசியல், #பிரவேசம், #அரசியல்_நிலைப்பாடு, # ரஜினி_மக்கள்_மன்றம், #அண்ணாத்த, #விதை2விருட்சம், #Rajini, #Rajinikanth, #Corona, #Politics, #Entry, #Political_Position, #Rajini_Makkal_Mandram, #Annatha, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcam,